"நூலிழையில் வெற்றி!" காங்கிரஸ் vs பாஜக.. மத்திய பிரதேச ரேஸில் முந்துவது யார்.. வெளியான பரபர சர்வே
இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் மிக விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், இது தொடர்பாக இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.
இந்தாண்டு இறுதியில் மொத்தம் 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. குறிப்பாக மத்தியப் பிரதேசத்தில் வரும் நவம்பர் 17ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கே காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது.

அங்கு இப்போது சவுஹான் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இருக்கும் நிலையில், கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்கிறது. இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.
மத்தியப் பிரதேசம்: இதற்கிடையே மத்தியப் பிரதேச தேர்தல் குறித்து இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் தற்போது அங்கே ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக தனிப்பெரும் கட்சியாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் 230 இடங்கள் இருக்கும் நிலையில், அங்கே தனிப்பெரும்பான்மையுடன் ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்க 116 இடங்கள் தேவை.
வரும் தேர்தலில் பாஜக 115 இடங்களில், அதாவது சரியாக 50% இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் பாஜக 109 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல அங்கே பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் 110 இடங்களை வெல்லக்கூடும் என்று சர்வே கூறுகிறது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களில் வென்றிருந்த நிலையில், அதில் இருந்து 4 இடங்களை இழக்கும் என கூறப்பட்டுள்ளது.
கடும் போட்டி: அதேபோல பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, சுயேச்சைகள் ஆகியவை ஐந்து இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தி பேசும் மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்த முறை போட்டி எந்தளவுக்குக் கடுமையாக இருக்கும் என்பதையே இது காட்டுகிறது.
வாக்கு சதவிகித அடிப்படையில் பாஜகவுக்கு அதிகபட்சமாக 44.38 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் பின்னாலேயே வரும் காங்கிரஸ் கட்சிக்கு 42.51 சதவீத வாக்குகள் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதர கட்சிகளுக்கு 13.11 சதவீத வாக்குகள் கிடைக்கும். முன்னதாக கடந்த 2018 தேர்தலில் பாஜக 41.02 சதவீதமும், காங்கிரஸுக்கு 40.89 சதவீதமும் பெற்றிருந்தது. மற்ற கட்சிகள் 18.09 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
பெஸ்ட் முதல்வர் வேட்பாளர்: எந்த முதல்வர் வேட்பாளர் பெஸ்ட் என்ற கேள்விக்கு பாஜகவின் சிவராஜ் சிங் சவுகானுக்கு ஆதரவு அதிகமாக இருப்பதாக இந்தியா டிவி சர்வே-இல் கூறப்பட்டுள்ளது. அவர் முதல்வராகத் தொடர வேண்டும் என 44.32 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
அதேநேரம் காங்கிரஸ் தலைவர் கமல்நாத்துக்கும் ஆதரவு அதிகமாகவே இருக்கிறது. கமல்நாத் முதல்வராக வேண்டும் என 38.58 சதவீதம் பேர் கூறுகிறார்கள். பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு 9 சதவீதம் பேர் ஆதரவாக இருக்கும் நிலையில், காங்கிரஸின் தலைவர் திக்விஜய சிங்கிற்கு 1.52 சதவீத ஆதரவு இருக்கிறது.
பிரதான பிரச்சினைகள்: மேலும், இந்த சர்வே-இல் கலந்து கொண்டவர்களில் 65.32 சதவீதம் பேர் சாதி ரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவை என்று கூறியுள்ளனர். அதேநேரம் 20.63 சதவீதம் பேர் அது தேவையில்லை எனக் கூறியுள்ளனர். மேலும், மத்தியப் பிரதேசத்தில் எது முக்கியமான பிரச்சினை என்ற கேள்விக்கு 27.4 சதவீதம் பேர் வேலையின்மை எனக் கூறியுள்ளனர்.
மேலும், 21.05 சதவீதம் பேர் வளர்ச்சி இல்லாமல் இருப்பது என்றும் 19.11 சதவீதம் பேர் பணவீக்கம் என்றும் கூறியுள்ளனர். அதேபோல 14.42 சதவீதம் பேர் இந்துத்துவா என்றும், 7.23 சதவீதம் பேர் ஊழல் என்றும் கூறியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications