திரிபுரா புதிய முதல்வராக பிப்லாப் குமார் தேப் தேர்வு!
திரிபுரா மாநில முதல்வராக பிப்லாப் குமார் தேப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கவுகாத்தி: திரிபுரா மாநில முதல்வராக பிப்லாப் குமார் தேப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திரிபுராவில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. 25 ஆண்டுகளாக திரிபுராவில் இருந்த மார்க்சிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

இதில் மக்கள் முன்னணி கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜக 43 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக 35 இடங்களையும், திரிபுரா மக்கள் முன்னணி கட்சி 8 இடங்களையும் கைப்பற்றியது.
இடதுசாரிகள் 16 இடங்களில் வென்று இருக்கிறார்கள். காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. இதன் மூலம் இந்தியாவின் ஏழை முதல்வர் தனது பதவியை இழந்து இருக்கிறார்.
இந்த நிலையில் திரிபுரா மாநில முதல்வராக பிப்லாப் குமார் தேப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிப்லாப் குமார் தேப் திரிபுரா மாநில பாஜக தலைவராக கடந்த 2016ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார்.
இவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தீவிரமாக வேலை செய்து வந்தவர் என்பதும் குறிப்பிடதக்கது. இவர் பண்ணாமலிபூர் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.
மேலும் துணை முதல்வராக ஜிஸ்னு தேவ் வர்மன் பதவியேற்கிறார்.இவரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தீவிரமாக வேலை செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications