கர்நாடக பட்ஜெட் தாக்கல்.. மேகதாது அணைக்கு அனுமதி பெற முடிவு.. முதல்வர் சித்தராமையா அறிவிப்பு
பெங்களூர்: கர்நாடகாவில் தேர்தல் முடிந்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் அறிவிப்பில் மேகதாது திட்டத்திற்கு அனுமதி பெற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.
2023-24 நிதியாண்டின் இது இரண்டாவது பட்ஜெட் ஆகும். கடந்த பாஜக ஆட்சியில் தேர்தலுக்கு முன்பாக பாதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது மீதி பட்ஜெட்டை காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்தார்.

காங்கிரஸின் தேர்தலுக்கு முந்தைய ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றத் தேவையான உண்மையான நிதி ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் வருவாயை அதிகரிக்கும் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இன்று இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வராக இது சித்தராமையாவின் ஏழாவது பட்ஜெட் இதுவாகும். 2013 முதல் 2018 வரையிலான அவரது ஆட்சிக் காலத்தில் அவர் ஏற்கனவே 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் சித்தராமையா பங்கேற்கும் 14வது பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகும். இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அளவு ரூ.3.35 லட்சம் கோடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முறை பட்ஜெட் துறை ரீதியாக வரிசையாக சித்தராமையா மூலம் அறிவிக்கப்படும். தமிழ்நாடு பட்ஜெட் பாணியில் எந்தெந்த துறைக்கு என்னென்ன திட்டம், எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்ற அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த வருடம் லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில் பல முக்கிய அறிவிப்புகள் இன்றைய பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட சில திட்டங்களை நீக்குவது தொடர்பாகவும், அதன் மூலம் வருவாயை அதிகரிப்பது தொடர்பாகவும் இன்று அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன.
மேகதாது: மேகதாது அணைத்திட்டம் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த பட்ஜெட் அறிவிப்பில் மேகதாது திட்டத்திற்கு அனுமதி பெற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சித்தராமையா குறிப்பிட்டுள்ளார். நிலம் கையகப்படுத்துதல், இழப்பீடு வழங்குதல் போன்ற பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அறிவித்தார். ஆனால் அதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்புகளை வெளியிடவில்லை. இந்த திட்டத்திற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சி முறியடிக்கப்படும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடக மாநில துணை முதல்வரும், நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே. சிவகுமார் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவத்தைச் சந்தித்து மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கப்பெற வேண்டிய காவிரி நீரை பெறுவதற்கு தேவையான முயற்சிகளை அனைத்து மட்டங்களிலும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. கர்நாடக அரசு அவ்வப்போது மேகதாது பிரச்சினையை எழுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்த அணைத்திட்டத்தை அனுமதிக்க மாட்டோம், என்று கூறி உள்ளார். இது கர்நாடக அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications