நிலக்கரி ஊழல்: ஒடிஷா முதல்வரிடம் சிபிஐ விசாரணை?

நிலக்கரி ஊழல் வழக்கில் அண்மையில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில் தொழில் அதிபர் குமாரமங்கலம் பிர்லாவின் பெயரும், பிர்லா குழுமத்திற்கு சொந்தமான ஹின்டால்கோ நிறுவனத்தின் பெயரும் சேர்க்கப்பட்டது. முன்னதாக ஹின்டால்கோ நிறுவனத்திற்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
அப்போது ஹின்டால்கோவுக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்க மறுக்கப்பட்டது குறித்து ஒடிஷா முதல்வர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக நவீன் பட்நாயக்கிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள ஹின்டால்கோ நிறுவன அலுவலகத்தில் நேற்று சோதனை நடத்தியபோது கணக்கில் காட்டப்படாத ரூ.25 கோடிக்கும் அதிகமான பணத்தை பறிமுதல் செய்ததாக சிபிஐ தெரிவித்துள்ளது. இதற்கிடையே நிலக்கரி ஊழல் வழக்கில் சிக்கியதையடுத்து ஹின்டால்கோவின் பங்குகள் 5 சதவீதம் சரிந்துள்ளன.












Click it and Unblock the Notifications