மாயமான விமானத்தைக் கண்டுபிடிக்க இஸ்ரோவின் உதவியை நாடியது கடலோரக் காவல் படை
டெல்லி: ஆம்லா ஆபரேஷன் கண்காணிப்புக்குச் சென்ற போது 3 விமானிகளுடன் மாயமான டார்னியர் விமானத்தைத் தேடுவதற்கு இஸ்ரோவிடம் உதவி கேட்கப் பட்டுள்ளது.
கடலோர காவல் படைக்கு சொந்தமான டோர்னியர் சி.ஜி.791 ரக விமானம், நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இரவு 9.20 மணியளவில் மாயமானது. கடைசியாக சிதம்பரத்தில் இருந்து 16 கடல் மைல் தொலைவில் கிழக்கு திசையில் பறந்து கொண்டிருந்ததாக திருச்சியில் உள்ள ரேடார் கருவியில் அந்த விமானம் பதிவாகியுள்ளது.

விமானம் மாயமான தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டவுடன் உடனடியாக தரை வழியாகவும், கடல் வழியாகவும் தேடுதல் பணி தொடங்கப்பட்டது. முழு வீச்சில் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், காணாமல் போன டார்னியர் விமானத்தை தேடுவதற்கு இஸ்ரோவிடமும் உதவி கேட்கப் பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தின் உதவியுடன் விமானத்தின் சிக்னலை கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தவிர 3 விமானிகளுடன் மாயமான விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப் படுகிறது. எனவே, விசாகப்பட்டிணத்திலிருந்து கப்பற்படையின் நீர்மூழ்கி கப்பல் மூலமும் விமானம் தேடப்பட உள்ளது. நீர்மூழ்கி கப்பல் மூலம் தேடும் பணி இன்று மாலைக்குள் துவங்கப்படும் என கடலோர பாதுகாப்பு படையின் கிழக்கு பிராந்திய ஐ.ஜி.ஷர்மா தெரிவித்துள்ளார்.
மாயமான விமானம் பலமான காற்று வீசினாலே தாக்கு பிடிக்கக் கூடியதல்ல எனக் கூறப்படுகிறது. எனவே, எதிர்பாராதவிதமாக பலத்த காற்று வீசி அதில் விமானம் தூக்கி வீசப் பட்டிருந்தால், அது கடலுக்கு அடியில் சென்று புதைந்திருக்கக் கூடும் என சந்தேகிக்கப் படுகிறது.
அவ்வாறு நடந்திருந்தால் கடலின் மேற்பரப்பில் தேடி எந்தப் பயனும் இல்லை என்பதால் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் தேடும் பணி துவக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications