'பாகுபலி' ரிலீஸையொட்டி கல்லூரிக்கு விடுமுறை விடுங்கள், இல்லாவிட்டாலும் வரமாட்டோம்: பி.இ. மாணவர்கள்
ஹைதராபாத்: பாகுபலி படம் ரிலீஸாவதையொட்டி ஜூலை 10ம் தேதி அன்று விடுமுறை விடக் கோரி தெலுங்கானாவைச் சேர்ந்த என்ஜினியரிங் மாணவர்கள் கல்லூரி முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி படம் இன்று பிரமாண்டமாக ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் மெட்சல், ஹைதராபாத்தில் உள்ள சிஎம்ஆர்ஐடி கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் முதல்வருக்கு வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளனர்.
Meanwhile in HYD #BaahubaliStorm pic.twitter.com/VLljJQJ0Nv
— Sage Ninja (@iamGunjanGrunge) July 10, 2015 அந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது,
மதிப்பிற்குரிய ஐயா,
சிஎம்ஆர்ஐடி கல்லூரியில் உள்ள சிஎஸ்இ டிபார்ட்மென்ட்டைச் சேர்ந்த மாணவர்கள் நாங்கள். நாளை(10.7.2015) பாகுபலி ரிலீஸ் ஆவதால் கல்லூரிக்கு அதிகாரப்பூர்வ விடுமுறை அறிவிக்க வேண்டுகிறோம்.
எப்படி இருந்தாலும் நாளை நாங்கள் கல்லூரிக்கு வர மாட்டோம். அதனால் கால் செய்யவோ, மெசேஜ் அனுப்பவோ வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
ஜெய் மஹிஷ்மதி
நன்றி,
இப்படிக்கு,
தங்கள் கீழ்படிந்த பிரபாஸ் ரசிகர்கள் மற்றும் ராஜமவுலி ரசிகர்கள்
குறிப்பு: எங்களிடம் கூடுதலாக ஒரு டிக்கெட் உள்ளது. வேண்டும் என்றால் நீங்களும் எங்களுடன் சேர்ந்து படம் பார்க்கலாம்.
இவ்வாறு மாணவர்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த கடிதத்தை சகி என்பவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications