கிப்ட் இருக்கிறது.. எங்களோடு காதலர் தினத்தை கொண்டாடுங்கள்.. மோடிக்கு ஷாகீன் பாக் போராளிகள் அழைப்பு!
பிரதமர் மோடிக்கு டெல்லி ஷாகீன் பாக் பகுதி போராளிகள் போராட்ட அழைப்பு விடுத்து இருக்கிறார்கள்.
Recommended Video
டெல்லி: பிரதமர் மோடிக்கு டெல்லி ஷாகீன் பாக் பகுதி போராளிகள் போராட்ட அழைப்பு விடுத்து இருக்கிறார்கள். எங்களோடு வந்து காதலர் தினத்தை கொண்டாடுங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.
டெல்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை அருகே இருக்கும் ஷாஹீன் பாக் பகுதி சிஏஏ போராட்டத்தின் அடையாளமாக மாறியுள்ளது. கடந்த ஒரு மாதமாக ஷாகீன் பாக் பகுதியில் பெண்கள் தீவிரமாக போராட்டம் செய்து வருகிறார்கள். இந்த போராட்டம் முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் போராட்டம் ஆகும்.
இந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பாக முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. டெல்லி சட்டசபை தேர்தலில் இந்த போராட்டம் அதிக முக்கியத்துவம் பெற்றது.

போராட்டம் எப்படி
இந்த போராட்டம் டெல்லி தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த மக்கள் இப்போதும் ஷாகீன் பாக் பகுதியில் போராடி வருகிறார்கள். சிஏஏவிற்கு எதிரான போராட்டம் டெல்லியில் தீவிரம் அடைந்து இருக்கிறது. தேர்தல் முடிவு குறித்து கவலைபடாமல் மக்கள் அங்கு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடிக்கு அழைப்பு
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு டெல்லி ஷாகீன் பாக் பகுதி போராளிகள் போராட்ட அழைப்பு விடுத்து இருக்கிறார்கள். எங்களோடு வந்து காதலர் தினத்தை கொண்டாடுங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளனர். அவர்கள் தங்கள் அழைப்பில், மோடி, அமித் ஷா இருவரும் இங்கே வரலாம். அவர்கள் எங்களோடு பேசலாம். நாங்கள் அவர்களுக்காக பரிசுகள் வைத்து இருக்கிறோம் .

தயார்
அவர்கள் அதை வாங்கி கொண்டு எங்களிடம் விவாதிக்கலாம். அவர்கள் ஒருவேளை எங்களை மனம் மாற்ற முடிந்தால், இந்த சட்டம் இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது இல்லை என்றால் நாங்கள் எங்கள் போராட்டத்தை வாபஸ் வாங்கி கொள்கிறோம். சிஏஏ மூலம் பல லட்சம் மக்கள் நாடு இழப்பார்கள். இஸ்லாமியர்களை பழி வாங்கலாம் என்பதற்காகவே இப்படி சட்டம் கொண்டு வருகிறார்கள்.

காதல்
நாங்கள் இன்று காதல் பாடல் ஒன்றை வெளியிட இருக்கிறோம். மோடிக்கு ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் வைத்து இருக்கிறோம். அதை மோடி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்று அந்த மக்கள் தெரிவித்துள்ளனர். அந்த பெண்களின் துணிச்சலான இந்த அழைப்பு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தலைவர்கள் பொதுவாக காதல் தினத்தை விரும்ப மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications