ஐசான் தப்பிப் பிழைத்தால்... டிசம்பர் 2வது வாரம் வரைக்கும் வேடிக்கை பார்க்கலாமாம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சூரியனுக்கு அருகே போய்க் கொண்டிருக்கும் ஐசான் வால் நட்சத்திரம் தப்பிப் பிழைத்தால், டிசம்பர் மாதத்தில் முதல் இரு வாரங்கள் வரை அதை பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இருந்தாலும் இப்போதைக்கு நவம்பர் 28ம் தேதிக்கு அதற்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது. அன்றுதான் சூரியனை மிக மிக அருகே நெருங்கப் போகிறது. அன்று அது பொசுங்கிப் போகலாம் என்ற எதிர்பார்ப்பு பலமாக உள்ளது.

ஒருவேளை அதிலிருந்து தப்பிப் பிழைத்தால் ஐசானை, டிசம்பர் முதல் 2 வாரங்கள் வரையிலும் பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் வரை

கிறிஸ்துமஸ் வரை

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு வரை இந்த வால்நட்சத்திரத்தைக் காண முடியுமாம்.

அதிகாலையில் ஜோராக தெரியும்

அதிகாலையில் ஜோராக தெரியும்

அதிகாலை நேரத்தில்தான் ஐசான் வால் நட்சத்திரத்தை பிரகாசமான தோற்றத்துடந் காண முடியும்.

கிறிஸ்துமஸ் அன்று மறைந்து விடும்

கிறிஸ்துமஸ் அன்று மறைந்து விடும்

பெத்லகேமில் இயேசுகிறிஸ்து பிறந்த தினத்தன்று வானில் தெரிந்த நட்சத்திரத்தைப் போல கிறிஸ்துமஸ் தினத்தன்றும் இந்த நட்சத்திரத்தைப் பார்க்கலாம் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். காரணம், அதற்குள் அது மறைந்து போயிருக்குமாம். அதாவது வெறும் கண்ணால் அதற்கு மேல் அதைப் பார்க்க முடியாது.

நெருக்கத்தில் போகப் போக கூடும் பிரகாசம்

நெருக்கத்தில் போகப் போக கூடும் பிரகாசம்

சூரியனை நெருங்க நெருங்க அதன் தாக்கத்தால் ஐசானின் பிரகாசமும் கூடிக் கொண்டே போவதால்தான் அதை வெறும் கண்ணால் பார்க்க முடிகிறது.

விலகிப் போய் விட்டால்

விலகிப் போய் விட்டால்

ஒரு வேளை நவம்பர் 28ம் தேதி அது சூரியனிடமிருந்து தப்பி அதைத் தாண்டிப் போய் விட்டால் பிரகாசம் குறைந்து போய் வெறும் கண்ணால் பார்க்க முடியாத நிலை ஏற்படும்.

சரி, ஐசானை எப்படிப் பார்க்கலாம்...

சரி, ஐசானை எப்படிப் பார்க்கலாம்...

நவம்பர் 25ம் தேதி காலையில், சூரிய உதயத்திற்கு 54 நி்மிடங்களுக்கு முன்பு ஐசான் பிரகாசமாக தெரியும். அதை உதயவானில் பார்க்கலாம். சாதாரண பைனாகுலர் மூலமாகவே அதைப் பார்க்க முடியும். வானில், தென் கிழக்கில் பார்க்க வேண்டுமாம்.

வியாழக்கிழமை பகலில்

வியாழக்கிழமை பகலில்

வியாழக்கிழமை பகல் நேரத்திலேயே பிரகாசமாக தெரியும் ஐசான் என்கிறார்கள். அப்படிப் பார்க்கும்போது நேரடியாக சூரியனைப் பார்க்கக் கூடாது. பார்த்தால் கண் பார்வை பறி போய் விடும் வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

சனிக்கிழமை அதிகாகாலையிலும் பார்க்கலாம்

சனிக்கிழமை அதிகாகாலையிலும் பார்க்கலாம்

அதேபோல ஐசான் தப்பிப் பிழைத்திருந்தால், நவம்பர் 30ம் தேதி சனிக்கிழமை அதிகாலையில் அதை பார்க்கலாம். ஆனால் அப்போது அவ்வளவு தெளிவாகத் தெரியாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+