ஹைதராபாத்தில் சீக்கியர்கள், முஸ்லீகள் இடையே மோதல்: நடந்தது என்ன?
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் சீக்கியர்களின் மதக் கொடி எரிக்கப்பட்டதால் அவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
ஹைதராபாத்தின் கிஷன்பாக் பகுதியில் உள்ள சிக் சவுனியில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சீக்கியர்களின் மதக்கொடியை எரித்துள்ளனர். இதைடுத்து சீக்கயர்களுக்கும், அந்த பகுதியில் வசிக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே காரசார வாக்குவாதம் நடந்துள்ளது. அதன் பிறகு பிரச்சனை அடங்கி அவரவர் வீடுகளுக்கு சென்றுவிட்டனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை சில சீக்கிய வாலிபர்கள் வாள்களுடன் வந்து சிக் சவுனியில் வசிக்கும் முஸ்லீகளின் வீடுகளுக்குள் புகுந்து தாக்கியுள்ளனர். மேலும் முஸ்லீம்களின் உடைமைகளை தீ வைத்து எரித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த பக்கத்து பகுதி முஸ்லீம்கள் அங்கு கூடினர். இதையடுத்து சீக்கியர்கள் மற்றும் முஸ்லீம்கள் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கினர். மேலும் 10 தனியார் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

உடனே எல்லை பாதுகாப்பு படையினர் அங்கு வந்தனர். துணை ராணுவத்தினர் முதலில் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர். அப்படியும் கூட்டம் கலையாததால் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒருவர் குண்டடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். காயம் அடைந்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 3 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். பலியான 4 பேரும் முஸ்லீம்கள்.
மோதல் நடந்த இடத்தில் 144 தடை உத்ததரவு பிறப்பிக்கப்பட்டதுடன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சிக் சவ்னி பகுதியில் முன்னதாக 2006ம் ஆண்டு சீக்கியர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு இடையே நடந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications