For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லாமே "பிராடு" கோப்பால்.. எல்லாமே பிராடு!

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இளம் வயதில் தரையைத் துடைப்பது போன்று வெளியான புகைப்படம் மோசடியான போட்டாஷாப் வேலை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இதுதொடர்பாக கேட்கப்பட்ட ஆர்டிஐ விசாரணைக்கு, அது உண்மையான புகைப்படம் அல்ல என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

லோக்சபா தேர்தலுக்கு முன்பு மோடியை அப்படி பில்டப் செய்து பிரளயத்தைக் கிளப்பினர் பாஜகவினர். தல போல வருமா என்று பாடாத குறையாக ஒரே ஏத்தாக ஏத்திக் காட்டினர் மோடியை.

அதில் இந்த மோடியின் இளம் வயதுப் படமும் ஒன்று. மோடி தேர்தலில் வெற்றி பெற்றதும் இந்தப் படத்தை வெளியில் விட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

தரையைத் துடைத்தாராம்

அந்தப் படத்தில் மோடி தோற்றத்தில் ஒரு இளம் வயது நபர் இருந்தார். அவர்தான் மோடி என்றும் அவர் இளம் வயதில் இப்படியெல்லாம் தரையைத் துடைத்து வாழ்க்கை நடத்தினார் என்றும் அவ்வளவு கஷ்டப்பட்டு இப்போது இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார் என்றும் கதை கட்டி விட்டார்கள்.

ஆர்.எஸ்எஸ். கூட்டத்தின்போது

ஆர்.எஸ்எஸ். கூட்டத்தின்போது

1988ம் ஆண்டு நடந்த ஆர்எஸ்எஸ் கூட்டத்தின்போது மோடி இப்படியெல்லாம் செயல்பட்டார் என்றும் அந்தப் படத்திற்கு விளக்கம் அளித்து தட்டி விட்டனர் நெட்டில்.

அடப் பாவமே!

அடப் பாவமே!

அந்தப் படத்தைப் பார்த்த பலருக்கும் நெஞ்சு விம்மியது.. கண்ணு கம்மியது.. குரல் கும்மியது.. அடடா இப்படியெல்லாம் மோடி கஷ்டப்பட்டவராய்யா.. அடடா என்று உச்சு கொட்டி பார்த்துப் பார்த்து ரசித்தனர் அந்தப் படத்தை.

டுபாக்கூர் பாஸ்!

டுபாக்கூர் பாஸ்!

ஆனால் இந்தப் படம் ஒரு டுபாக்கூர் போட்டோஷாப் வேலை என்று தற்போது நிரூபணமாகியுள்ளது. அகமதாப்த்தைச் சேர்ந்த ஒருவர் இதுகுறித்து பிரதமர் அலுவலகத்திடம் ஆர்டிஐ மூலம் கேள்வி கேட்டிருந்தார்.

அது அவர் அல்ல

அது அவர் அல்ல

இதற்கு அரசிடமிருந்து பதில் வந்துள்ளது. அதில் உள்ளவர் பிரதமர் இல்லை என்று அதில் விளக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படிபப்ட்ட ஒரு படம் பிரதமர் அலுவலகத்தில் இருப்பில் இல்லை என்றும், அது அவரது இளம் பிராய மோடியின் படங்களில் இடம் பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்பிங் படம்

மார்பிங் படம்

மேலும், சம்பந்தப்பட்ட படம் மார்பிங் செய்யப்பட் படம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் படத்தில் இருந்த ஒரிஜினல் நபரின் படமும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அது மட்டுமாய்யா!

அது மட்டுமாய்யா!

அது மட்டுமா.. சமீபத்தில் கூட பிரதமர் மோடி சென்னைக்கு வந்து வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்த்துச் சென்ற பிறகு அதுதொடர்பான படம் ஒன்றை பிஐபி வெளியிட்டது. அதில் போட்டாஷாப் செய்து ஜன்னலுக்கு வெளியே வெள்ளம் பாதித்த பகுதிகள் தெரிவது போல காட்டி குழப்பம் ஏற்படுத்தி அசிங்கப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.

English summary
A black-and-white photo of Prime Minister Narendra Modi holding a broom and cleaning floor had gone viral during and after LS elections. But now it has finally been proved that a fake image.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X