திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச 8 பேர் கொண்ட குழுவை அறிவித்து காங்.
டெல்லி: திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் அறிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்துள்ளது. திமுக தரப்பில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்காக ஸ்டாலின் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மேலிடமும் விரைவில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கான குழுவை அறிவிக்கும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன் கூறியிருந்தார். இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், தமிழக சட்டசபை தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக 8 பேர் கொண்ட குழுவை அறிவித்தார்.
இந்த குழுவில் ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு, கோபிநாத், கிருஷ்ணசாமி, யசோதா, திருநாவுக்கரசர், தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த அறிவிப்பால் விரைவில் திமுக- காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
கூட்டணியில் தேமுதிக இணைந்தால் காங்கிரஸ் கட்சிக்கு 25; இணையாவிட்டால் 30 தொகுதிகளை ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளது; ஆனால் காங்கிரஸ் கட்சியோ 30 முதல் 50 தொகுதிகள் வரை எதிர்பார்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்











Click it and Unblock the Notifications