For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பரபரப்பு அரசியல் ஒருபக்கம்... பாசம் மறுபக்கம்.. பாட்டியை பாக்க இத்தாலி பயணமாகிறார் ராகுல் காந்தி

தனது 93 வயது பாட்டியைப் பார்க்க வரும் ஜூலை மாதம் இத்தாலிக்கு பயணமாகிறார் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி.

By Devarajan
Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது 93 வயதான பாட்டியைப் பார்க்க வரும் ஜூலை மாதம் இத்தாலி நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

ராகுல் காந்தியின் தாய் சோனியா காந்தி பிறப்பால் இத்தாலி நாட்டவர். அவர் இந்தியாவில் முழுமையாக தங்கி வாழ்ந்து வந்தாலும் அவரின் தாயார் உள்ளிட்ட உறவினர்கள் இத்தாலியில்தான் இருக்கிறார்கள்.

Cong Vice President Rahul Gandhi to vacation with grandmother, family

இதனால் வருடம்தோறும் ராகுல் காந்தி, தனது அம்மாவழி உறவினர்களை நேரில் பார்த்து நலம் விசாரித்து வருவது வழக்கம்.

இந்த நிலையில், இன்று ராகுல் தனது டிவிட்டர் பக்கத்தில், 'நான் எனது பாட்டியைச் சந்திக்க இத்தாலி செல்கிறேன் ' என்று பதிவிட்டுள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராண்டிட் சுர்ஜிவாலா கூறுகையில், " ராகுல்ஜி தனது 93 வயது பாட்டியை நேரில் பார்க்க செல்கிறார். வயதான பெற்றோரையும் அவர்களின் பெற்றோர்களையும் அருகில் இருந்து கவனித்துக் கொள்வது இந்தியர்களின் கலாச்சாரம். இதன் காரணமாகவே ராகுல் ஆண்டுதோறும் இத்தாலி செல்கிறார்." என்று தெரிவித்துள்ளார்.

English summary
Cong Vice President Rahul Gandhi to vacation with grandmother's family Italy coming July.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X