ராகுல் எங்கே, எப்போ தான் வருவார்?: குழம்பும் காங்கிரஸ் கட்சியினர்
டெல்லி: 2 வாரம் விடுப்பு எடுத்துச் சென்ற காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி எங்கு தான் இருக்கிறார் என்பது தெரியாமல் கட்சியினர் குழம்பிக் கொண்டிருக்கின்றனர்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி 2 வாரம் விடுப்பு எடுத்துச் சென்றுள்ளார். அவர் பாங்காங்குக்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் ராகுல் உத்தரகண்ட் மலைப்பகுதியில் இருப்பதை புகைப்படம் எடுத்து வெளியிட்டார். ஆனால் ராகுல் உத்தரகண்டில் இல்லை என்று காங்கிரஸ் தெரிவித்தது.
இதனால் ராகுல் காந்தி எங்கு தான் சென்றார் என்று தெரியாமல் உள்ளது.

வினோத் மேத்தா
அவுட்லுக் நிறுவனர் வினோத் மேத்தாவின் மறைவுக்கு ராகுல் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து அறிக்கை அனுப்பியதாக அவர் சார்பில் காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்டது.

ராகுல்
ராகுல் காந்தி விடுப்பு முடிந்து இன்று டெல்லி திரும்ப வேண்டும். அவர் இன்று வந்துவிடுவார் என்று கட்சியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அறிக்கை
ராகுல் வினோத் மேத்தாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளதால் அவர் ஏற்கனவே டெல்லி வந்துவிட்டாரா இல்லை இன்று வர மாட்டாரா என்று காங்கிரஸார் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

வர மாட்டார்
இன்னும் சில நாட்களுக்கு ராகுல் காந்தி டெல்லிக்கு திரும்ப மாட்டார் என்று விவரம் அறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

பட்ஜெட் கூட்டத் தொடர்
பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வரும் வேளையில் ராகுல் விடுப்பில் சென்றுவிட்டார். அவர் நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தெரிவித்திருந்தார்.
-
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications