“கை” ஓங்குமா? அனல் பறக்கும் திரிபுரா மாநில தேர்தல்.. 17 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்
திரிபுரா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 17 வேட்பாளர்களை கொண்ட பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டு உள்ளது.
திரிபுரா: வரும் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் 17 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அக்கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடது முன்னணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
திரிபுரா மாநிலத்தில் மாணிக் சஹா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. திரிபுராவின் பாஜக அரசின் 5 ஆண்டு ஆட்சி காலம் முடிவடைய இருக்கும் நிலையில் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
பிப்ரவரி 16 ஆம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் இதற்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் மாதம் 2 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மார்க்சிஸ்ட் - காங்கிரஸ் கூட்டணி
ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி சற்று முன் 48 வேட்பாளர்களை கொண்ட பட்டியலை வெளியிட்டு உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி 17 வேட்பாளர்களை கொண்ட பட்டியலை வெளியிட்டு உள்ளது. திரிபுராவில் எதிர்கட்சியாக இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடது முன்னணி கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் அங்கம் வகிக்கிறது.

இடது முன்னணி கூட்டணி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, காங்கிரஸ், ஆர்.எஸ்.பி, பார்வேர்டு பிளாக் ஆகிய கட்சிகள் இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. திரிபுராவில் பல ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாணிக் சர்க்கார் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அக்கட்சி வெளியிட்டு உள்ள வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை.

17 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி
மறுபக்கம் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா இன்று திரிபுரா சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் தங்கள் கட்சியின் 48 வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியும் இன்று காலை 17 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை கொண்ட பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

தலைநகர் அகர்தலாவில் யார்?
அதன்படி மோஹன்பூர் தொகுதியில் பிரசந்தா சென் சவுத்ரி, பர்ஜா தனித் தொகுதியில் சிஸ்தா மோகன் தாஸ், அகர்தலா தொகுதியில் சுதிப் ராய் பர்மன், பனமாலிபூர் தொகுதியில் கோபால் ராய், மஜ்லிஸ்பூர் தொகுதியில் கேசவ் சர்கார், பதர்கான் தனித்தொகுதியில் ராஜ் குமார் சர்கார், சூர்யமனிநகர் தொகுதியில் சுசாந்தார் சக்ரபூர்தி, சரிலா தனித்தொகுதியில் அசோக் தேபர்மாவும் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

முதலமைச்சரை எதிர்த்து போட்டி
டவுன் போர்டோவலி தொகுதியில் ஆஷிஷ் குமார் சஹா, தெலியமுரா தொகுதியில் அசோக் குமார் பைத்யா, ராதாகிஷோர்பூர் தொகுதியில் டைடன் பால், மதார்பாரி தொகுதியில் பிரணஜித் ராய், கமல்பூர் தொகுதியில் ரூபி கோப், கர்மாசரா தனித்தொகுதியில் திபா சந்திரா ரங்கால், பாபியாச்சரா தனித்தொகுதியில் சத்யாபன் தாஸ், கைலாசாஹர் தொகுதியில் பிரஜித் சின்ஹா, தர்மாநகர் தொகுதியில் சையான் பட்டார்சார்ஜீயும் போட்டியிட உள்ளனர்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications