‘கை’யில காசு இல்ல… ஒரு மாசம் சம்பளத்தை அனுப்புங்க…: காங்., எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு தலைமை உத்தரவு
டெல்லி: கட்சியில் கடும் நிதித்தட்டுப்பாடு நிலவுவதால், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் அனைவரும் தங்களது ஒரு மாத சம்பளத்தை கட்சிக்கு நன்கொடையாக அளிக்க வேண்டுமென காங்கிரஸ் கட்சியின் தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் மோதிலால் வோரா, இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் 44 லோக்சபா எம்.பி.க்களுக்கும் 68 ராஜ்யசபா எம்.பிக்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அக்டோபர் மாதம் முதல் வாரத்திற்குள் எம்.பிக்கள் தலா ஒரு லட்ச ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டுமென கூறப்பட்டுள்ளது. அதோடு முன்னாள் எம்.பி.க்களும் கட்சிக்கு நன்கொடை அளிக்கவேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கில் செலவு
கடந்த பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சி கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்ததாகவும் மாநிலங்களுக்கு ஏராளமான நிதி பிரித்தளிக்கப்பட்டதாலும் அந்த கட்சி நிதி நெருக்கடியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

கட்சி வளர்ச்சி நிதி
கடந்த பிப்ரவரி மாதம் கட்சி வளர்ச்சி நிதிக்காக கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தலா ரூ. 250 தர வேண்டுமென்று உத்தரவிடப்பட்டது. இதில் 75 சதவீதம் மத்திய தலைமைக்கும் 25 சதவீதம் மாநிலத்துக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என்று அந்த கட்சியின் பொருளாளர் மோதிலால் வோரா தெரிவித்துள்ளார்.

எம்.பிக்கள் நன்கொடை
காங்கிரஸ் கட்சி எம்.பிக்களிடம் நன்கொடை வசூலிக்கும் பொறுப்பு டெல்லி மாநில பொறுப்பாளர் பி.சி. சாக்கோ, டெல்லி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் அஜய் மக்கான் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நிதி நெருக்கடி
தற்போது மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடப்பதால் பெரும்பாலான நிறுவனங்கள் காங்கிரஸ் கட்சிக்கு நன்கொடை அளிக்க மறுத்துள்ளதால் கட்சியில் நிதிநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications