சத்தீஸ்கரில் ரேசில் முந்தும் காங்கிரஸ்.. நெருங்கி வரும் பாஜக.. டிவி9 சர்வே முடிவு
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூடுதல் தொகுதியில் வெற்றி பெற்றாலும், பாஜகவும் காங்கிரசுக்கு கடும் போட்டியை கொடுக்கக் கூடும் என்று டிவி9 வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
கடந்த 2000 -ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் இருந்து பிரிந்து சத்தீஸ்கர் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது. இங்கு முதல் மாநில சட்டசபை தேர்தல் கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் பாஜக 50 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. காங்கிரஸ் அந்த தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியானது. மற்ற கட்சிகள் 3 இடங்களில் வெற்றி பெற்றன. பின்னர் கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும் இதே நிலைதான் தொடர்ந்தது.

3 முறை பாஜக: அப்போதும் பாஜக 50 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 38 - இடங்களில் வென்றது. ஒரு இடம் அதிகமாக காங்கிரஸ் வென்றது. 2013-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெற்றது. பாஜக 49 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 39 இடங்களில் தான் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 2003 முதல் 2013 வரை நடந்த 3 சட்டசபை தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெற்று சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சி அமைத்தது.
ஆனால் 2018 ம் ஆண்டு நடந்த தேர்தலில் நிலைமை அப்படியே அடியோடு மாறியது. இந்த முறை பாஜக மிக மோசமாக தோல்வி அடைந்தது. 68 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று சத்தீஸ்கரில் ஆட்சி அமைத்தது. பாஜக 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற கட்சிகள் 7 இடங்களில் தான் வெற்றி பெற்றன. 2018 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றபோதும், நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற முடியவில்லை.
காங்கிரசுக்கு வாய்ப்பா?: சத்தீஸ்கரில், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவியது. சத்தீஸ்கரை பொறுத்தவரை மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டம் ஆகும். இதனால், தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற்றது. அதாவது, நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய இரு தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 74 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகின.
இன்று தெலுங்கானா மாநிலத்திற்கான சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. ஐந்து மாநில தேர்தல் முடிந்துள்ள நிலையில், இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதி கிடைத்தாலும் பாஜகவும் கடும் போட்டியை கொடுக்கம் என்று டிவி9 வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. டிவி9 வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், காங்கிரஸ் 40 - 50 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், பாஜக 35 முதல் 45 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கரில் மொத்த தொகுதிகள்: 90
பெரும்பாண்மைக்கு - 46
காங்கிரஸ்: 40 - 50
பாஜக: 35 - 45.
மற்றவை: 0 - 3
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications