கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிறது-குஜராத்தில் பாஜகவுக்கு பின்னடைவு- அலறவிடும் கருத்து கணிப்புகள்
குஜராத்தில் கடந்த சில மாதங்களாக நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் பாஜக வேகமாக வீழ்ச்சியை சந்தித்து வருவது தெரியவந்துள்ளது.
Recommended Video

காந்திநகர்: குஜராத்தில் 22 ஆண்டுகாலம் அசைக்க முடியாமல் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் பாஜகவை கருத்து கணிப்பு முடிவுகள் ரொம்பவே அலறவிட்டுக் கொண்டிருக்கின்றன. கடந்த 3 மாதங்களில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் பாஜக படுமோசமான வீழ்ச்சியை நோக்கி சரசரவென இறங்கிப் போய்க் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
குஜராத் சட்டசபை தேர்தலில் வென்றாக வேண்டிய நெருக்கடியில் பாஜக இருக்கிறது. குஜராத் சட்டசபை தேர்தலை, ஒரு லோக்சபா தேர்தலைப் போல கருதுகிறது பாஜக.
பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் முழு வீச்சில் குஜராத்தில் பிரசாரம் மேற்கொண்டனர். குஜராத்தின் மகன் நான் என்கிற மண்சார்ந்த் முழக்கங்களை இறைஞ்சும் குரலில் எல்லாம் மோடி முன்வைத்திருக்கிறார்.

காங்கிரஸுக்கு ஏறுமுகம்
ஆனால் கடந்த சில மாதங்களாக நடத்தப்பட்டு வரும் கருத்து கணிப்புகளோ பாஜக சடசடவென சரிவை நோக்கி வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் தெளிவாக இருக்கிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி ஏறுமுகத்தை நோக்கி வெற்றி நடைபோடுகிறது.

காங்கிரஸுக்கு 26
கடந்த ஆகஸ்ட் மாதம் சிஎஸ்டிஎஸ்- லோக்நிதி- ஏபிபி கருத்து கணிப்பு நடத்தியது. இதில், பாஜக 144 முதல் 152 இடங்களைக் கைப்பற்றும் என கூறப்பட்டிருந்தது. அதாவது தனிப்பெரும்பான்மைக்கும் மிக அதிகமான இடங்களைப் பாஜக பெறும் என்றது அக்கருத்து கணிப்பு. காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 26 முதல் 32 இடங்கள்தான் கிடைக்கும் என்றது அக்கருத்து கணிப்பு.

பாஜகவுக்கு பின்னடைவு
இதேபோல் நவம்பர் மாதம் நடத்தப்பட்ட சிஎஸ்டிஎஸ்- லோக்நிதி- ஏபிபி கருத்து கணிப்பில் இன்னும் சற்று குறைவாக 113- 121 இடங்களில்தான் பாஜக வெல்லும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது காங்கிரஸுக்கு ஏறுமுகமாக 58 முதல் 64 இடங்கள் கிடைக்கும் என்றது கருத்து கணிப்பு.

கிடுகிடு வளர்ச்சியில் காங்.
தற்போது நடத்தப்பட்ட கருத்து கணிப்பிலோ பாஜகவுக்கு 91 முதல் 99 இடங்கள்தான் கிடைக்குமாம். காங்கிரஸுக்கோ 78-86 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக இக்கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. மேலும் இரு கட்சிகளுமே தலா 43% வாக்குகளைப் பெறும் என்றும் இக்கருத்து கணிப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications