மோடியை துண்டு துண்டாக வெட்டப் போவதாக மிரட்டிய காங். வேட்பாளருக்கு ஜாமீன்
அலகாபாத்: மோடியை வெட்டிக் கொல்லப் போவதாக பிரச்சாரத்தில் கூறியதற்காக கைது செய்யப் பட்ட காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத்துக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் சகாரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் இம்ரான் மசூத். இவர் கடந்தவாரம் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்த போது, ‘உத்தரப் பிரதேசத்தை மற்றொரு குஜராத்தாக மாற்ற நரேந்திர மோடி முயன்றால், அவரை துண்டு துண்டாக வெட்டி கூறுபோடுவேன்' என ஆவேசமாகக் கூறினார்.
இதனால் சகாரன்பூர் போலீசார் இம்ரான் மசூத்தைக் கைது செய்தனர். தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் பேசியது தொடர்பான சிடி ஆதாரம் அம்மாவட்ட ஆட்சியர் மூலமாக தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனக்கு ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் இம்ரான். இன்று அந்த மனுவை விசாரித்த நீதிபதி, இம்ரான் மசூத்க்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications