சத்தீஸ்கர் மாநில தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.560 கோடி
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான சிங்தேவின் சொத்து மதிப்பு ரூ560 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு வரும் 11, 19-ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிறைந்த மாநிலம் என்பதால் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
இம்மாநில தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் காங்கிரஸ் வேட்பாளர் சிங்தேவ்தான் பணக்கார வேட்பாளர் என்று தெரிய வந்துள்ளது. அரச குடும்பத்தைச் சேர்ந்த அவரது சொத்து மதிப்பு ரூ. 560 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் அவரது சொத்து மதிப்பு ரூ. 187 கோடியாக இருந்தது. 5 ஆண்டுகளுக்குள் சுமார் ரூ. 400 கோடி சொத்து அவருக்கு அதிகரித்துள்ளது.

அசையா சொத்து மட்டும் ரூ550 கோடி
சிங் தமது வேட்பு மனுவில் அசையும் சொத்துகளாக ரூ10.03 கோடியும் அசையா சொத்துகளாக ரூ550 கோடியும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

18 வங்கி கணக்குகள்
அத்துடன் சிங்தேவ் தமக்கு 18 வங்கி கணக்குகள் இருப்பதாகவும் அவற்றில் 94.22 லட்சம் வைத்திருப்பதாகவும் கையில் ரூ4.25 லட்சம் இருக்கிறது என்றும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வருக்கு?
முதலமைச்சராக இருக்கும் ராமன் சிங் தனக்கு ரூ. 5.61 கோடிக்கு சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஏழை வேட்பாளர்
சத்தீஸ்கர் மாநில தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஏழை வேட்பாளராக ஜக்தல்பூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சமுகாஸ்யாப் கருதப்படுகிறார். அவருக்கு ரூ. 13 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் தான் இருக்கிறதாம். காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும் கோடீசுவரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

5 ஆண்டுகளில் 260 மடங்கு
பொதுவாக சத்தீஸ்கரில் கடந்த 5 ஆண்டுகளில் வேட்பாளர்கள் சொத்து மதிப்பு 260 சதம் அதிகரித்துள்ளதாம். அதில் 12 எம்.எல்.ஏக்கள் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 330 சதவீதம் அதிகரித்திருக்கிறதாம்.
-
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications