சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் கூடியது காங்கிரஸ் செயற்குழு.. ராகுல் காந்திக்கு தலைவர் பதவி?
டெல்லி: ஜனாதிபதி தேர்தல் மற்றும் ராகுல்காந்திக்கு பதவி உயர்வு வழங்குவது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயற்குழு இன்று டெல்லியில் கூடியது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்து வரும் இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட அக்கட்சி மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில், தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் நாட்டில் நடக்கும் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்படுவதோடு சில முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த முறை நடந்த கூட்டத்தில் சோனியா காந்தி கலந்து கொள்ளவில்லை. ராகுல் காந்தி தலைமையில் அந்த கூட்டம் நடந்தது. தற்போது 7 மாதம் கடந்துவிட்ட நிலையில் கட்சியின் மூத்த உறுப்பினர்களை சோனியா சந்தித்துள்ளார். வரும் அக்டோபர் மாதம் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இன்று நடக்கும் செயற்குழுவில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சி தலைவராக பதவி உயர்த்தலாமா அல்லது வேறு ஒருவரை அதற்கு நியமிக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலையொட்டி அனைத்து எதிர்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் குறித்தும் பேசப்படும்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications