ஜம்மு காஷ்மீரை தொடர்ந்து புறக்கணிக்கும் காங்கிரஸ்.. உமர் அப்துல்லா குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

ஜம்மு: காங்கிரஸ் கட்சி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை தொடர்ந்து புறக்கணிப்பதாக, தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் உமர் அப்துல்லா கருத்து பதிவிட்டுள்ளார். அதில் காஷ்மீர் மீது காங்கிரஸ் கட்சியின் அக்கறையும் நிலைப்பாடு நன்கு புரிகிறது. தற்போது மக்களவை தேர்தல்கள் நடைபெற்று வரும் நிலையில் காஷ்மீரில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

Congress continues to ignore Jammu and Kashmir state..Omar Abdullah allegation

ஆனால் காஷ்மீரில் நடத்தப்படும் தேர்தல் பொதுக்கூட்டங்களில், பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் அடிக்கடி பங்கேற்பதை காண முடிகிறது. இதிலிருந்து பாரதிய ஜனதா ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை புறகக்ணிக்கவில்லை என்பது தௌிவாகிறது.

காங்கிரஸ் கட்சிக்கும் பாரதிய ஜனதாவிற்கும் இடையே 6 இடங்களில் கடும் போட்டி நிலவுவதாக குறிப்பிட்டுள்ளார். இதில் 3 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு பாஜகவே நேரடி போட்டியாக உள்ளதாக உமர் குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி யாருடனும் கூட்டணியின்றி தனித்து போட்டியிட்டுகிறது. இந்நிலையில் தான் அவர் காங்கிரஸ் கட்சியை குற்றம்சாட்டி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+