தைரியமிருந்தால் கர்நாடக அரசை கலைக்க வேண்டியதுதானே? மோடிக்கு காங்கிரஸ் பதிலடி
பெங்களூர்: கர்நாடக அரசு மீது ஊழல் புகார்களை கூறும் பிரதமர் நரேந்திர மோடி, ஆட்சியை கலைக்க வேண்டியதுதானே என காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, பெங்களூரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகாவிலுள்ள சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, '10 சதவீத கமிஷன்' அரசு என குற்றம்சாட்டினார். 10 சதவீத கமிஷன் பெற்றுக்கொண்டுதான் அரசு பணிகளுக்கு உரிமை வழங்கப்படுவதாக மோடி தனக்கே உரிய பாணியில் கேலி செய்தார்.

மத்திய அமைச்சர் சதானந்தகவுடாவோ, கர்நாடகா, 30 சதவீத கமிஷன் மாநிலம் என்று விமர்சனம் செய்தார்.
இதனால் கோபமடைந்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, உங்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா 100 சதவீதம் கமிஷன் வாங்க கூடியவர். அவரிடம் தெளிவாக கேட்டுத் தெரிந்து கொள்ளவும் என டுவிட்டரில் பதிலடி கொடுத்தார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் உக்ரப்பா இன்று நிருபர்களிடம் கூறுகையில், ஊழல் புகாரின்பேரில், அரசியலமைப்பின், 356வது பிரிவின்கீழ், கர்நாடக அரசை மத்திய அரசு கலைக்கலாமே? ஏன் அதை மத்திய அரசு செய்யவில்லை. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டியதுதானே என உக்ரப்பா கேள்வி எழுப்பினார்.
பாஜக இல்லாத பாரதம் என்பது ராஜஸ்தானில் தொடங்கிவிட்டது. நான் பாஜக இல்லாத இந்தியா வேண்டும் என கூறவில்லை. மோடி இல்லாத இந்தியா தேவை. இவ்வாறு உக்ரப்பா தெரிவித்தார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications