70 வருடத்தில் காங்கிரஸால் முடியலை.. நான் மட்டும் 5 வருடத்தில் முடிக்க முடியுமா.. மோடி கேள்வி
பாட்னா: காங்கிரஸ் கட்சியால் 70 வருடங்களில் செய்ய முடியாத வேலைகளை 5 வருடங்களில், என்னால் எப்படி செய்ய முடியும் என பிரதமர் நரேந்திர மோடி பீகாரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
பீகார் மாநிலம் ஜமுய் நகரில் இன்று(செவ்வாய்கிழமை) இரவு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், "நான் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டேன் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் காங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளில் செய்து முடிக்காத வேலைகளை 5 ஆண்டுகளில் நான் எப்படி செய்து முடிக்க முடியும். எனினும் நிறைய பணிகளை முடித்துள்ளேன். பல பணிகளை முடிப்பதற்கு நிறைய உழைத்துள்ளேன். இன்னும் சில பணிகளை முடிக்க நிறைய உழைக்க வேண்டிய உள்ளது. அதனால் எனக்கு உங்கள் ஆதரவுவும் ஆசியும் தேவை" என்றார்.
இந்த பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசிய பிரதமர் மோடி , "காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாட்டை பின்னோக்கி கொண்டு சென்றுவிடும் என்றார்.
மேலும் அவர் பேசுகையில் "பயங்கரவாதம், விலையேற்றம், வன்முறை, ஊழல், கருப்பு பணம் உள்ளிட்ட பிரச்னைகள் காங்கிரஸ் ஆட்சியின் போது இருந்தது. மேலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதெல்லாம் நாட்டின் செல்வசெழிப்பு, நம்பகத்தன்மை, ராணுவத்தின் மன உறுதி, நேர்மைக்கான மரியாதை ஆகியவை குறைந்து வந்துள்ளது. நேரு-இந்திரா காந்தி குடும்பம் சட்டமேதை அம்பத்கரை எப்போதுமே அவமானப்படுத்தி வந்துள்ளது. அதை மக்கள் மறந்துவிட வேண்டாம்" இவ்வாறு மோடி பேசினார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications