ராகுலை மன்னிப்பு கேட்க சொன்னது மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷின் சொந்த கருத்து: காங்கிரஸ்
டெல்லி: முஸ்லிம்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியது அவரது சொந்த கருத்து என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
அண்மையில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, உத்தரபிரதேச மாநிலம் முசாபர்பூரில் நடந்த கலவரத்துக்கு பாரதிய ஜனதா கட்சிதான் காரணம் என்றும், அந்த கலவரத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருடன் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு தொடர்பு கொண்டு இருப்பதாகவும் கூறினார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ராகுல் காந்தியின் இந்த பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் செய்தது. இதைத்தொடர்ந்து, வருங்காலத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் பேசுமாறு ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கையும் விடுத்தது.

ஜெய்ராம் ரமேஷுடன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு
இந் நிலையில் மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேசை மூத்த உருது பத்திரிகையாளர்கள் சிலர் சந்தித்து பேசினர். அப்போது முசாபர்நகர் கலவரம் தொடர்பாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்து முஸ்லிம்களின் மனதை புண்படுத்தி இருப்பதாகவும், எனவே அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் யோசனை தெரிவித்தனர்.

மன்னிப்பு - ராகுல் பரிசீலிக்கலாமே
இந்த கோரிக்கையை ராகுல் காந்தி பரிசீலிக்கலாம் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியிருக்கிறார். மேலும் ஐ.எஸ்.ஐ. அமைப்புடன் தொடர்பு படுத்தி ராகுல்காந்தி கூறிய கருத்து பற்றி முஸ்லிம்கள் அல்லாத தனது நண்பர்கள் சிலர் கூட வருத்தம் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஜெய்ராம் ரமேஷின் சொந்த கருத்து
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற தொனியில் ஜெய்ராம் ரமேஷ் கூறியது பற்றி காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் மீம் அப்சல் கூறுகையில்; ஜெய்ராம் ரமேஷ் என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது. ஆனால் அவர் என்ன கூறி இருந்தாலும் அது அவருடைய சொந்த கருத்துதான். காங்கிரஸ் கட்சியின் கருத்து ஆகாது என்றார்.

பாஜக கருத்து
ஆனால், முஸ்லிம்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கப் போகிறாரா? அல்லது தான் கூறிய கருத்துக்காக ராகுல் காந்தியிடம் ஜெய்ராம் ரமேஷ் மன்னிப்பு கேட்கப் போகிறாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று பாரதிய ஜனதாவின் செய்தித் தொடர்பாளர் சித்தார்த்நாத் சிங் கூறியிருக்கிறார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications