களமிறங்கிய நடிகர்.. மபி முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகானுக்கு காங்கிரஸ் வைத்த செக்? யார் இந்த விக்ரம்?
போபால்: மத்திய பிரதேசத்துக்கு ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் தற்போதைய பாஜக முதல்வர் சிவ்ராஜ் சவுகானை எதிர்த்து நடிகர் ஒருவரை காங்கிரஸ் கட்சி களமிறக்கி உள்ளது. இந்நிலையில் தான் அந்த நடிகர் யார்? அவர் சிவ்ராஜ் சவுகானை வீழ்த்துவாரா? என்பது குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். தற்போது இந்திய தேர்தல் ஆணையம் 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளது. அதில் மத்திய பிரதேச மாநிலமும் ஒன்று.

மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளது. இங்கு ஒரே கட்டமாக நவம்பர் 17 ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
மத்திய பிரதேசத்தை பொறுத்தமட்டில் பாஜக, காங்கிரஸ் இடையே தான் நேரிடை போட்டி நடைபெற்று வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே பாஜக சார்பில் 136 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். கடந்த 9ம் தேதி வெளியான 4வது கட்ட வேட்பாளர் பட்டியலில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானின் பெயர் இடம் பெற்றிருந்தது. வழக்கம்போல் அவர் புத்னி தொகுதியில் பாஜக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் தான் மத்திய பிரதேச சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் 144 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் கமல்நாத் சிந்தவாரா தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்கின் மகன் ஜெய்வர்த்தன் சிங் ராகிகாட் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் தான் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நடிகர் ஒருவர் களமிறக்கப்பட்டுள்ளார். அதாவது சிவ்ராஜ் சிங் சவுகான் போட்டியிடும் புத்னி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விக்ரம் மஸ்டல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நடிகராக உள்ளார். 2008 ல் சின்னத்திரையில் வெளியான ராமாயணம் எனும் தொடரில் அனுமனாக நடித்து பெயர் பெற்றார்.
அதன்பிறகு டாப் கியர், ஆஸ்ரம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் வெப்சீரிஸான Battle of Saragarhi-ல் தொடரிலும் நடித்துள்ளார். இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதம் காங்கிரஸ் கட்சியில் அவர் இணைந்த நிலையில் அடுத்த 3 மாதத்தில் அவருக்கு காங்கிரஸ் கட்சி தேர்தலில் சீட் வழங்கி உள்ளது. இதற்கிடையே தான் அவர் ஜெயிப்பாரா? என்பது பற்றிய தகவலும் வெளியாகி உள்ளது.
அதாவது புத்னி தொகுதியில் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு மிகப்பெரிய அளவில் செல்வாக்கு உள்ளது. கடந்த 1900, 2006, 2008, 2013, 2018 ஆகிய தேர்தல்களில் சிவ்ராஜ் சிங் இந்த தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். அதோடு இந்த தொகுதி பாஜகவின் கோட்டையாக இருக்கிறது. அதாவது 1985 முதல் நடந்த தேர்தல்கள் அனைத்திலும் பாஜக வேட்பாளரே இங்கு வெற்றி பெற்று வந்துள்ளார்.
கடந்த 2018 சட்டசபை தேர்தலில் சிவ்ராஜ் சிங் சவுகனை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் யாதவை 58 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதனால் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கே இந்த முறையும் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் அரசியலில் எதுவும் நடக்கலாம், அதோடு விக்ரம் மஸ்டல் நடிகர் என்பதால் பல மக்களின் மனதிலும் இடம்பிடித்துள்ளார். இது காங்கிரசுக்கு சாதகமாக அமையலாம் என அந்த கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம்












Click it and Unblock the Notifications