லோக்சபா தேர்தல்: காங்கிரசுக்கு 100க்கும் குறைவான இடம்தான்.. இது அத்வானியின் ஆரூடம்
Subscribe to Oneindia Tamil
ராஞ்சி: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 100க்கும் குறைவான இடங்கள்தான் கிடைக்கும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்.
குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் ஆளுநராக பணியாற்றிய மறைந்த கைலாஷ்பதி மிஸ்ராவின் நினைவுநாள் நிகழ்ச்சி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அத்வானி, எதிர்வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 100க்கும் குறைவான இடங்கள்தான் கிடைக்கும்.

அதேபோல் கடுமையாக பாடுபட்டாலும் பாரதிய ஜனதாவுக்கு 182-க்கும் அதிகமான இடங்கள் கிடைக்க வாய்ப்பு இல்லை.
பல்வேறு ஊழல்கள் மூலம் காங்கிரஸ் தனக்குத்தானே குழி தோண்டிக் கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு பாரதிய ஜனதாவை ஆட்சியில் அமர்த்த மக்கள் தீர்மானித்து விட்டனர் என்றார்.












Click it and Unblock the Notifications