அம்பரீசை தூக்கி விட்டு நடிகை ரம்யாவுக்கு அமைச்சர் பதவி?

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: அம்பரீசின் வீட்டு வசதித்துறை அமைச்சர் பதவியை நடிகை ரம்யாவுக்கு வழங்கும்படி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக அமைச்சரவையில் இன்னும் 4 இடங்கள் காலியாக உள்ளன. எனவே, தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்குமாறு காங்கிரஸின் மூத்த எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி, தசரா பண்டிகை முடிந்த பிறகு அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை ரம்யாவுக்கு அமைச்சர் பதவி வழங்கும்படி சித்தராமையாவிற்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ரம்யாவிற்கு அமைச்சர் பதவி...

ரம்யாவிற்கு அமைச்சர் பதவி...

கடந்த சில நாட்களுக்கு முன் அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணா நேரில் சந்தித்து பேசினார். அப்போது வீட்டு வசதித்துறை அமைச்சர் அம்பரீசை நீக்கிவிட்டு நடிகை ரம்யாவுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்ததாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக சோனியா காந்தியை நடிகை ரம்யாவும் சந்தித்து பேசியதாகத் தெரிகிறது.

டெல்லி விஜயம்...

டெல்லி விஜயம்...

இந்நிலையில் அமைச்சரவை மாற்றம் குறித்து ஆலோசனை செய்வதற்காக சித்தராமையா மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். அங்கு கட்சி மேலிட பொறுப்பாளர் திக்விஜய்சிங்கை நேரில் சந்தித்து அவர்கள் பேசினர். அப்போது நடிகை ரம்யாவை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளும்படி திக்விஜய்சிங் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

6 மாதத்திற்குள்...

6 மாதத்திற்குள்...

இதன்படி, நடிகை ரம்யாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டால் சட்டப்படி அடுத்த 6 மாதத்திற்குள் அவர் எம்.எல்.சி.யாகவோ அல்லது எம்.எல்.ஏ.வாகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில அமைச்சர்கள்...

மேலும் சில அமைச்சர்கள்...

அம்பரீஷ் மட்டுமின்றி அமைச்சரவையில் சரியாக செயல்படாத அமைச்சர்களான கிம்மனே ரத்னாகர், பாபுராவ் சின்சனசூர் உள்பட சிலரையும் நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+