குஜராத் உள்ளாட்சித் தேர்தல்: பாஜகவுக்கு பின்னடைவு- விஸ்வரூபமெடுத்தது காங்கிரஸ்
குஜராத் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி விஸ்வரூபமெடுத்துள்ளது.
அகமதாபாத்: குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. ஆனால் 2013-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலை ஒப்பிடுகையில் பாஜகவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
2013-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மொத்தம் உள்ள 75 நகராட்சிகளில் 59ஐ கைப்பற்றியிருந்தது. இம்முறை 47-ல்தான் பாஜகவால் வெல்ல முடிந்துள்ளது.

அதேநேரத்தில் 2013 தேர்தலில் 9 நகராட்சிகளில் மட்டும் வென்ற காங்கிரஸ் இம்முறை 16 ஐ கைப்பற்றி மிரட்டியுள்ளது. 1905 உள்ளாட்சி இடங்களுக்கு 2013-ல் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 1144 இடங்களையும் காங்கிரஸ் 449 இடங்களையும் கைப்பற்றின.
இம்முறை 2060 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. பாஜக 1167 இடங்களைக் கைப்பற்றியது; ஆனால் காங்கிரஸ் 630 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. கடந்த தேர்தலை விட 200 இடங்களை காங்கிரஸ் கூடுதலாக அள்ளியுள்ளது.
குஜராத் சட்டசபை தேர்தலிலும் பாஜக நூலிழையில் தப்பி வென்றது. காங்கிரஸ் விஸ்வரூபமெடுத்திருந்தது. குஜராத்தில் பாஜகவின் கால்நூற்றாண்டு கால ஆதிக்கத்துக்கு முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications