Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ம.பி-இல் கைமாறும் மகுடம்? "பாஜக vs காங்கிரஸ்" கடும் போட்டி.. கடைசியில் முந்துவது யார்! புது சர்வே

Subscribe to Oneindia Tamil

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதுள்ள சூழலில் அங்கே எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்த பரபர சர்வே வெளியாகியுள்ளது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் என்று மொத்தம் 5 மாநிலங்களில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் சத்தீஸ்கரில் முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு விரைவில் நடைபெற உள்ளது.

 Congress is having slight edge over BJP in Madhya Pradesh election says janmat opinion poll

இந்த 5 மாநில தேர்தலில் மத்தியப் பிரதேசம் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இந்தி பேசும் மாநிலங்களில் ஒன்றான மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

மத்தியப் பிரதேசம்: மத்தியப் பிரதேசத்தில் இப்போது பாஜக ஆட்சியில் இருக்கும் நிலையில், அங்கே சவுஹான் முதல்வராக இருக்கிறார். அங்கு கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்கிறது. இந்த முறை மத்தியப் பிரதேசத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி கடுமையாக இருக்கும் என கூறப்படுகிறது. அங்கே வரும் நவ. 17ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் நிலையில், டிச. 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதற்கிடையே மத்தியப் பிரதேச தேர்தல் குறித்து ஜன்மத் அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 230 இடங்கள் இருக்கும் நிலையில், அங்கே எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பெற 116 இடங்களில் வெல்ல வேண்டும். இதற்கிடையே காங்கிரஸ் கட்சிக்கு அங்கே தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்று ஜன்மத் அமைப்பு சர்வேயில் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் அங்கே 114- 117 இடங்களில் காங்கிரஸ் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.

பாஜக: மறுபுறம் இப்போது ஆட்சியில் இருக்கும் பாஜக ஆட்சியை இழக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அங்கே பாஜகவால் 105-108 இடங்களில் வெல்ல முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கே போட்டி கடுமையானதாக இருக்கும் என்றும் அதில் காங்கிரஸ் சற்று முன்னிலை பெறும் என்றும் ஜன்மத் அமைப்பு சர்வேயில் தெரிய வந்துள்ளது. இதர கட்சிகளும் சுயேச்சைகளும் மத்தியப் பிரதேசத்தில் 3 அல்லது 4 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டில் நடந்த மத்தியப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பாஜக அந்தத் தேர்தலில் 109 இடங்களில் மட்டுமே பெற்றது. காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் அங்கே முதல்வராகப் பதவியேற்றார்.

கமல்நாத்: இருப்பினும், கமல்நாத் அரசு அங்கே 15 மாதங்கள் மட்டுமே நீட்டித்தது. அப்போது சிந்தியா கமல்நாத் இடையே மோதல் ஏற்படவே, சந்தியா கலகம் செய்து 22 காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் பாஜகவில் ஐக்கியமானார். இதனால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, மீண்டும் பாஜகவின் சவுஹான் முதல்வர் ஆனார். இந்தச் சூழலில் தான் இப்போது மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் தேர்தல் நடைபெறுகிறது. இந்தி பேசும் மாநிலங்களில் ஒன்றாக மத்தியப் பிரதேசம் இருக்கும் நிலையில், அங்கே காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+