ஹைதராபாத்தில் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள்.. குதிரை பேரத்தை தடுக்க நள்ளிரவில் நடவடிக்கை!
கர்நாடகா காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்கள் ஹைதராபாத் சென்றடைந்தனர்.
Recommended Video

ஹைதராபாத்: கர்நாடகா காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்கள் ஹைதராபாத் சென்றடைந்தனர்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜ 104 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் 78 இடங்களையும் மஜத 37 இடங்களையும் கைப்பற்றின.
104 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் எடியூரப்பாவும், காங்கிரஸ் உள்ளிட்ட 117 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக குமாரசாமியும் ஆட்சியமைக்க வஜுபாய் வாலாவிடம் உரிமை கோரியிருந்தனர்.

ஆட்சியமைத்த பாஜக
ஆனால் பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் நேற்று முன்தினம் இரவு அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து நேற்று எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்றார்.

குதிரை பேரம்
எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார் ஆளுநர். இதனால், காங்கிரஸ் மற்றும் மஜத கட்சி எம்எல்ஏக்களை இழுக்க பாஜக வினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போலீஸ் காவல் விலக்கல்
இதனை தடுக்கும் வகையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நேற்று முன்தினம் மாலை மைசூர் சாலையில் உள்ள ஈகிள்டன் ரிசார்ட்டில் போலீஸ் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டனர். நேற்று எடியூரப்பா முதல்வராக பதவியேற்ற பின் அங்கு போலீஸ் காவல் விலக்கி கொள்ளப்பட்டது.

ஹைதராபாத்தில் எம்எல்ஏக்கள்
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் வெளி மாநிலங்களுக்கு அழைத்து செல்லப்படுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் எம்எல்ஏக்கள் அனைவரும் ஹைதராபாத் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

காங் எம்எல்ஏக்கள் 3 பேர்
காங்கிரஸ் எம்.எல் ஏக்களில் 3 பேரை தவிர மற்ற 75 எம்.எல்.ஏக்கள் ஹைதராபாத் சென்றுள்ளனர். மதசார்பற்ற ஜனதா தளம் எம்.ஏ.க்கள் 37 பேரும் ஐதராபாத் சென்றடைந்தனர்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications