தற்காலிக சபாநாயகர் போப்பையாவுக்கு எதிர்ப்பு.. காங்., மஜத போர்க்கொடி.. வழக்கு தொடர முடிவு
கர்நாடக சட்டசபையின் தாற்காலிக சபாநாயகராக பாஜக கட்சியை சேர்ந்த கே.ஜி. போப்பையா தேர்வு செய்யப்பட்டு இருப்பதற்கு காங்கிரஸ், மஜத கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Recommended Video

பெங்களூர்: கர்நாடக சட்டசபையின் தாற்காலிக சபாநாயகராக பாஜக கட்சியை சேர்ந்த கே.ஜி. போப்பையா தேர்வு செய்யப்பட்டு இருப்பதற்கு காங்கிரஸ், மஜத கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இவரது நியமனத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி நாளை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளது.
நாளை பாஜகவின் எடியூரப்பா அரசு கர்நாடக சட்டசபையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க வேணடும். தற்போது சட்டசபையின் பலம் 222. ஆனால் இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற குமாரசாமியின் ஒரு தொகுதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனால் தற்போதைய பலம் 221 மட்டுமே.

இதனால் தற்போது பெரும்பான்மையை நிரூபிக்க 111 உறுப்பினர்கள் தேவை. பாஜக கட்சிக்கு 104 உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிறது. இன்னும் 7 பேரின் ஆதரவு அந்த கட்சிக்கு தேவை. காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணிக்கு மொத்தம் 117 எம்எல்ஏக்கள் பலம் இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது சபாநாயகரின் பங்கு இதில் முக்கியத்துவம் பெறுகிறது. தற்போது பாஜகவை சேர்ந்த கே.ஜி. போப்பையா தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா இவரது தேர்விற்கு ஒப்புக்கொண்டுள்ளார். முதலில் கர்நாடக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆர்.வி.தேஷ்பாண்டே தேர்ந்தெடுக்கப்பட இருந்தார்.
போப்பையா செய்யப்பட்டு இருப்பதற்கு காங்கிரஸ், மஜத கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவர் விதிமுறைகளை பின்பற்றி தேர்வு செய்யப்படவில்லை என்று இரண்டு கட்சிகளும் தெரிவித்துள்ளது. இது கர்நாடக சட்டசபையில் இன்னும் பிரச்சனையை உருவாக்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆர்.வி.தேஷ்பாண்டே 8 முறை வெற்றி பெற்ற எம்எல்ஏ இருக்கும்போது, 3 முறை வெற்றி பெற்ற போப்பையாவை சபாநாயகராக நியமித்திருப்பது ஏன் என தெரியவில்லை. வயதின் அடிப்படையில் தேஷ்பாண்டேதான் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் குளறுபடி செய்யவே பாஜக இப்படி செய்கிறது என்று குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.இவரது நியமனத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி நாளை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications