தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி.. ரஜினி, கமல் அரசியல் பற்றி திருநாவுக்கரசரிடம் கேட்டறிந்தார்
கர்நாடக சட்டசபைத் தேர்தலை அடுத்து காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த தமிழகத்தில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.
டெல்லி : காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில், கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழகத்தின் அரசியல் நிலவரங்களை ராகுல் காந்தி உன்னிப்பாக கேட்டறிந்தார்.

மேலும், வருகிற மே 12ம் தேதி நடக்கவுள்ள கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த தமிழகத்தில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்தும், கமல், ரஜினி அரசியல் குறித்தும் ராகுல்காந்தி கேட்டறிந்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த தமிழகத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி இருப்பதாகவும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் மிகப்பெரிய சுற்றுப்பயணம் மேற்கொள்ள ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications