அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை புறக்கணிக்கும் காங்கிரஸ்.. ஆர்எஸ்எஸ், பாஜக விழா என விமர்சனம்
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பை காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டவர்கள் நிராகரித்துள்ளனர். இதன்மூலம் அவர்கள் விழாவில் பங்கேற்கமாட்டார்கள் என்பதை தெளிவுப்படுத்தி உள்ள நிலையில் அது பாஜகவின் விழா என கடுமையாக சாடியுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். மேலும் விழாவில் பங்கேற்க வரும்படி மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள், மடாதிபதிகள், சாமியார்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் நாடாளுமன்றத்தின் லோக்சபா காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோருக்கு விழாவில் பங்கேற்கும்படி அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் பங்கேற்பார்களா? மாட்டார்களா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு காங்கிரஸ் தரப்பில் இப்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கான அழைப்பிதழை சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தகவல்தொடர்பு பிரிவு பொதுச்செயலாளரான ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது: கடவுள் ராமரை இந்தியாவில் பல லட்சக்கணக்கான மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். அதோடு மதம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்டவர்களின் விருப்பமாகும். ஆனால் ஆர்எஸ்எஸ், பாஜக அயோத்தி ராமர் கோவில் அரசியல் ரீதியாக கையில் எடுத்துள்ளது.
முழுவதுமாக கோவில் கட்டி முடிக்கப்படாத நிலையில் ஆர்எஸ்எஸ், பாஜக தேர்தல் ஆதாயத்துக்காக அவசரமாக திறக்கிறது. இதனால் ராமரை வணங்கும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் ஆர்எஸ்எஸ், பாஜகவின் நிகழ்ச்சியின் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பை நிராகரித்துள்ளனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications