பஞ்சாப் இடைத் தேர்தலில் பட்டையை கிளப்பும் காங்கிரஸ்.. 3 தொகுதிகளில் முன்னிலை!
Recommended Video
அமிருதசரஸ்: பஞ்சாப்பில் நடைபெற்ற 4 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. எதிலுமே பாஜக முன்னிலை பெற முடியவில்லை.
பஞ்சாப்பில் கேப்டன் அம்ரிந்தர் சிங் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அம்மாநிலத்தின், ஜலாலாபாத், பக்வாரா, முகேரியான் மற்றும் டாகா ஆகிய 4 தொகுதிகளுக்கு 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது.

காங்கிரஸ், சிரோமணி அகாலிதளம், பாஜக நடுவே இங்கு கடும் போட்டி நிலவியது. இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்த நிலையில், ஜலாலாபாத், பக்வாரா, முகேரியான் ஆகிய மூன்று இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. டாகாவில் சிரோமணி அகாலிதளம் முன்னிலை வகிக்கிறது.
ஆரம்ப டிரெண்ட்படி, பக்வாரா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் பல்விந்தர் சிங் தலிவால், பாஜக வேட்பாளர் ராஜேஷ் பாகாவை விடவும் 1,852 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
முகேரியான் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜங்கி லால் மகாஜன் காங்கிரஸ் வேட்பாளரான இந்து பாலாவுக்கு எதிராக 212 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.
டாகா சட்டமன்றத் தொகுதியில், சிரோமணி அகாலிதள வேட்பாளர் மன்பிரீத் சிங் அயலி, காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் சந்துவை விட 759 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
ஜலாலாபாத்தில், காங்கிரஸ் வேட்பாளர் ரமிந்தர் அவ்லாவைவிட, 5,936 வாக்குகள் வித்தியாசத்தில் சிரோமணி வேட்பாளர், ராஜ் சிங் திபிபுராவை விட முன்னிலையில் உள்ளார்.
கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையே, பஞ்சாபில் நான்கு சட்டமன்ற இடங்களுக்கு இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றன. அங்கும், காலை 8 மணிக்கு எண்ணிக்கை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications