மிசோரத்தில் ட்விஸ்ட் இருக்கு? திடீரென காங்கிரஸுக்கு எகிறும் மவுசு! வாக்கு எண்ணிக்கை நாளில் பரபர
ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் நிலையில், அங்கே காங்கிரசுக்கு திடீரென ஒரு வாய்ப்பு அமையும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
சமீபத்தில் 5 தான் 5 மாநில தேர்தல் நடைபெற்றது. லோக்சபா தேர்தலுக்கு முன்பு நடந்த சட்டசபைத் தேர்தல் என்பதால் இது முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. இதில் 4 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று தான் வெளியானது.

இதில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்துள்ளது. தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் கட்சி ஆறுதல் வெற்றியைப் பெற்றுள்ளது.
மிசோரம்: இதில் மிசோரத்திலும் நேற்று வாக்கு எண்ணிக்கை நடக்க இருந்தது. இருப்பினும், மிசோரம் மாநிலத்தில் இருக்கும் அமைப்புகளின் கோரிக்கையை நேற்று வாக்கு எண்ணிக்கை இன்று ஒத்திவைக்கப்பட்டது. கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் மிசோரத்தில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை வேண்டாம் என்தே கோரிக்கையாகும். அதன்படி மிசோரத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
மற்ற 4 மாநிலங்களில் இருந்து மிசோரம் முற்றிலும் வேறுபட்டது. முதலில் இது வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. அதுவே இந்த அரசியல் களத்தை வேறுபடுத்தி இருக்கிறது. அதேபோல மற்ற மாநிலங்களில் தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் இடையே தான் போட்டி நிலவியது. ஆனால் மிசோரம் மாநிலத்தில் அப்படி இல்லை. இங்கே காங்கிரஸ், பாஜக போட்டியிட்டாலும் அவர்களால் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க வாய்ப்பு குறைவு.
தொங்கு சட்டசபை: சமீபத்தில் வெளியான தேர்தலுக்கு பிந்தைய வாக்குப்பதிவிலும் கூட மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கம் ஆகியோர் இடையேதான் போட்டி இருக்கும் எனக் கூறப்பட்டது. அங்கே மொத்தம் 40 இடங்கள் இருக்கும் நிலையில், எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கக் குறைந்தது 21 இடங்களில் வெல்ல வேண்டும். ஆனால் தேர்தலுக்கு பிந்தைய சர்வேக்களை வைத்துப் பார்க்கும் போது எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்றே கூறப்படுகிறது.
அங்கே தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. மிசோ தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கம் என எந்த கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் மெஜாரிட்டி மார்க் கிடைக்காது. மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற சூழல் இருக்கும் என்றே தெரிகிறது. கூட்டணி என்று வரும் போது அவர்களுக்கு இருக்கும் ஆப்ஷன் பாஜக மற்றும் காங்கிரஸ் தான்.
காங்கிரஸ் தான் ஒரே ஆப்ஷன்: அதில் மிசோ தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கம் என இரு கட்சிகளும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தெளிவாகக் கூறிவிட்டன. அதேபோல தேர்தலுக்கு பிந்தைய சர்வேகளிலும் கூட பாஜகவுக்கு 2 இடங்கள் கிடைத்தாலே பெரிசு என்பது போலவே கூறியிருக்கிறார்கள். எனவே அடுத்து இருக்கும் ஆப்ஷன் என்றால் அது காங்கிரஸ் தான். அவர்கள் 6, 7 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
40 இடங்களைக் கொண்ட மிசோரத்தில் 6, 7 இடங்கள் என்பது ஆட்சியைத் தீர்மானிக்கும் மேஜிக் நம்பராகவும் கூட மாறலாம். மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியுடன் ஆட்சியை அமைத்தால் அது வடகிழக்கு மாநிலத்தில் காங்கிரசின் ரிஎன்டரியாகவும் இருக்கும். இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், அங்கே திடீரென காங்கிரஸ் மவுசு அதிகரித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications