‛‛ஆபாசம்’’ இளைஞருடன் அந்தரங்கமாக இருந்த எம்எல்ஏ! மீண்டும் மத்திய பிரதேசத்தில் போட்டி! எந்த கட்சி?
போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதில் இளைஞர் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக இருந்த அந்தரங்க வீடியோ வெளியாகி சர்ச்சையில் சிக்கிய சிட்டிங் எம்எல்ஏ சுரேஷ் ராஜேவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வலைதளங்களில் பரவி வருகிறது.
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். இந்த மாநில சட்டசபையின் பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில் தான் மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி நவம்பர் 17 ம் தேதி மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் ஓட்டுகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
மத்திய பிரதேசத்தை பொறுத்தமட்டில் மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் 116 இடங்களில் வெற்றி பெற வேண்டும். மத்திய பிரதேசத்தை பொறுத்தமட்டில் பாஜக, காங்கிரஸ் இடையே தான் நேரிடை போட்டி நடைபெற்று வருகிறது. பாஜக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றவும், காங்கிரஸ் பாஜகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்கவும் தீவிரமாக களப்பணியை தொடங்கி உள்ளன.
இதனால் மத்திய பிரதேசத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே பாஜக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இந்நிலையில் தான் மத்திய பிரதேச சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் 144 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
அதன்படி முன்னாள் முதல்வர் கமல்நாத் சிந்தவாரா தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக உள்ள கேபி சிங் பிச்சூர் தொகுதியில் 5 முறை தொடர்ந்து வெற்றி பெற்ற நிலையில் தற்போது சிவ்பூரியில் களமிறக்கப்பட்டுள்ளார். இதுதவிர பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவாதேஷ் நாயக் அந்த மாநிலத்தின் உள்துறை அமைச்சரான நரோத்தம் மிஸ்ராவுக்கு எதிராக டாடியா தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய வேட்பாளர் பட்டியல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சர்ச்சைக்கு பெயர் பெற்ற எம்எல்ஏவான சுரேஷ் ராஜி மீண்டும் தாப்ரா தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த 2020ல் பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர் மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதாவது கடந்த மாதம் சமூக வலைதளங்களில் இவர், இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் அந்தரங்க வீடியோ இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இதனால் அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என பலரும் நினைத்த நிலையில் காங்கிரஸ் கட்சி சீட் வழங்கி உள்ளது.
இந்த வீடியோ குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ சுரேஷ் ராஜி கூறுகையில், ‛‛இந்த வீடியோ கடந்த 4-5 மாதங்களாக பரப்பப்ட்டு வருகிறது. பணப்பரிக்கும் நோக்கத்தில் இந்த வீடியோ வெளியாகி உள்ளது. என்னிடம் ரூ.50 லட்சம் கேட்டனர். நான் கொடுக்கவில்லை. இதனால் தேர்தல் நேரத்தில் இந்த வீடியோவை வெளியிட்டு எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கின்றனர் என தெரிவித்து இருந்தார். ஆனால் இதற்கு அவர் எதிர் பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதோடு ரூ.50 லட்சம் கேட்டு ஒருவர் மிரட்டி ஆபாச வீடியோவை பரப்பியும் கூட காங்கிரஸ் எம்எல்ஏ சுரேஷ் ராஜி போலீசில் புகார் செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பியது.












Click it and Unblock the Notifications