நேரு பிறந்த நாள் விழாவுக்கு பிரதமர் மோடியை காங். கட்டாயம் அழைக்க வேண்டும்: இன்ஸ்டவானி 'சர்வே'
டெல்லி: காங்கிரஸ் கட்சி மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடும் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடியை கட்டாயம் அழைக்க வேண்டும் என்று பொதுமக்களில் பலரும் கருத்து தெரிவித்திருப்பதாக இன்ஸ்டவானி நிறுவனம் நடத்திய 'சர்வே'யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் வரும் 17,18 தேதிகளில் டெல்லியில் நேரு பிறந்த நாள் விழா நடைபெறுகிறது. இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். ஆனால் பிரதமர் மோடிக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

நேரு பிறந்தநாள் விழா தொடர்பான மத்திய அரசு கமிட்டியில் நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறாததாலேயே பிரதமர் மோடியை காங்கிரஸ் அழைக்கவில்லை. இந்த நிலையில் இன்ஸ்டவானி நிறுவனமானது ஒரு சர்வே மேற்கொண்டது.
தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கடந்த 14-ந் தேதி 101 பேரிடம் இக்கருத்து கணிப்பை நடத்தியது.
"நேரு பிறந்த நாள் விழாவுக்கு பிரதமர் மோடியை காங்கிரஸ் அழைக்க தேவையில்லையா? என்பதுதான் கேள்வி.
இதற்கு பிரதமர் மோடியை கட்டாயம் அழைக்க வேண்டும் என்று 61% பேர் கூறியுள்ளனர்.
பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்டாயம் அழைக்க கூடாது என்று 16% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் எந்த கருத்தும் இல்லை என்று 23% பேர் கூறியுள்ளனர். பெரும்பான்மையினராக பிரதமர் மோடியை கட்டாயம் அழைக்க வேண்டும் என்றே கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications