மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வாஜ்பாயை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் ராகுல் காந்தி

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வாஜ்பாயை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    வாஜ்பாய் மருத்துவமனையில் திடீர் அனுமதி- வீடியோ

    டெல்லி: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாயை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து அரசியல் நிகழ்வுகளில் அதிகம் பங்கேற்காமல் இருந்த அவர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.

    Congress President Rahul Gandhi meets Vajpayee in the hospital

    இந்நிலையில் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். பின்னர் வழக்கமான சோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை விளக்கம் அளித்தது.

    இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் வாஜ்பாயை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.

    இதனிடையே முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் உடல் நலம் பெற அனைவரும் பிரார்த்திக்கிறோம் என காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+