மன்மோகனை குற்றம் சாட்டும் ப.சிதம்பரத்தின் புகாரை ஏற்க முடியாது: காங்கிரஸ்
டெல்லி: 2ஜி விவகாரத்தில் பிரதமர் பதவியை மன்மோகன் சிங் ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருப்பது ஏற்புடையது அல்ல என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.
ப.சிதம்பரம் அளித்த ஒரு பேட்டியில், 2 ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்க ஆ.ராசாவை மன்மோகன் சிங் அனுமதித்திருக்கக் கூடாது. 2ஜி ஊழல் செய்தி வெளியானதும் உரிமங்களை ரத்து செய்திருக்க வேண்டும். அவரும் பதவி விலகியிருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதற்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், முன்னாள் பிரதமர் மீது ப.சிதம்பரம் சுமத்திய குற்றச்சாட்டுகள் நியாயமற்றவை என்றே கருதுகிறேன். முன்னாள் மத்திய அமைச்சரவை ஒரு குழுவாகவே இயங்கியது.
இந்த யோசனை சிதம்பரத்திற்கு அப்போதே இருந்திருந்தால் மத்திய அமைச்சரவையிடம் தெரிவித்திருக்கலாம். எடுத்த முடிவுகளுக்கு முன்னாள் பிரதமரை மட்டுமே பொறுப்பாக்க முடியாது.
காங்கிரஸ் அரசாங்கத்தை பொறுத்தவரை பிரதமர் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுப்பதில்லை. அதுமட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பாக ப.சிதம்பரம் இப்போது கருத்து தெரிவிக்க வேண்டியதில்லை என்றார் சாக்கோ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications