பிசி பாட்டீலிடம் ரூ. 25 கோடிக்கு பேரம்.. மேலும் ஒரு ஆடியோவை ரிலீஸ் செய்தது காங்கிரஸ்!
காங்கிரஸ் எம்எல்ஏ பி.சி.பாட்டீலிடம் ஸ்ரீராமலு மற்றும் முரளிதரராவ் போனில் பேசி பாஜகவுக்கு வாக்களிக்க கோரும் ஆடியோவை காங்கிரஸ் ரிலீஸ் செய்துள்ளது.
பெங்களூரு: காங்கிரஸ் எம்எல்ஏ பி.சி.பாட்டீலிடம் ஸ்ரீராமலு மற்றும் முரளிதரராவ் போனில் பேசி பாஜகவுக்கு வாக்களிக்க கோரும் ஆடியோவை காங்கிரஸ் ரிலீஸ் செய்துள்ளது.
எடியூரப்பா அரசு மீது கர்நாடக சட்டசபையில் இன்னும் சற்றுநேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதனால் கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பு தொற்றியுள்ளது.
பாஜகவினர் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பேரம் பேசும் ஆடியோவும் வெளியாகி வருகிறது. இது பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

எம்எல்ஏ மனைவியிடம் பேரம்
இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவருக்கு பாஜக எம்எல்ஏ விஜயேந்திரா ரூ.15 கோடி பேரம் பேசியதாக புகார் எழுந்துள்ளது. காங். எம்.எல்.ஏவின் மனைவிக்கு பாஜக எம்எல்ஏ போன் செய்து எடியூரப்பாவுக்கு வாக்களிக்க சொன்னதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.15 கோடி அல்லது அமைச்சர் பதவி தருவதாக பாஜக எம்எல்ஏ கூறியுள்ளார்.

எடியூரப்பா ஆடியோ
இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் எடியூரப்பா பேரம் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. பி.சி. பாட்டீலிடம் எடியூரப்பா செல்போனில் பேசிய ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. தங்கள் பக்கம் வந்தால் அமைச்சர் பதவி அளிக்கப்படும் என எடியூரப்பா உறுதி அளித்துள்ளார்.

அமைச்சர் பதவி ஆஃபர்
கொச்சிக்கு செல்லாமல் இருந்தால் அமைச்சர் பதவி தருவதாக அந்த ஆடியோவில் தெரிவிக்கப்பட்டது. இதுவரை காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பேரம் பேசியதாக 3 ஆடியோக்கள் வெளியாகியது.

4வது ஆடியோ ரிலீஸ்
நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் 4வது பேர ஆடியோவை காங்கிரஸ் வெளியிட்டது. காங்கிரஸ் எம்எல்ஏ பி.சி.பாட்டீலிடம் ஸ்ரீராமலு மற்றும் முரளிதரராவ் போனில் பேசி பாஜகவுக்கு வாக்களிக்க கோரும் ஆடியோவை ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

ரூ.25 கோடி பேரம்
கட்சி மாறி வாக்களித்தாலும் எம்எல்ஏக்கள் பதவி பறிபோகாது. நமது சபாநாயகர் அதை உறுதி செய்வார் என ஸ்ரீராமலு பேசுவதை போன்று அந்த ஆடியோ உள்ளது. மேலும் பி.சி.பாட்டீலுக்கு ரூ.25 கோடி வழங்குவதாக ஸ்ரீராமலு கூறுவதாகவும் அந்த ஆடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications