ராஜஸ்தான் தேர்தல்: 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்.. Ex. தலைமை செயலருக்கு சீட்!

Subscribe to Oneindia Tamil

ஜெய்பூர்: ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், நேற்றும் இன்றும் 2 கட்டங்களாக காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இரண்டாவது பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் இருக்கின்றன. கடந்த 2018ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளது. தற்போது நவம்பர் மாதம் 25ஆம் தேதி அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பதிவாகும் வாக்குகள் டிசம்பர் மாதம் 3ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

 Congress releases its 2nd phase candidates list for Rajasathan assembly election

இந்த தேர்தலில் எப்படியாவது மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தீவிரமாக வேலை பார்த்து வருகிறது. அதேசமயம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கும் இடையே இருக்கும் மோதலை பயன்படுத்தி ஆட்சியை பிடிக்க வேண்டும் என பாஜக முயன்று வருகிறது. இதனால், அசோக் கெலாட், சச்சின் பைலட் இரு தரப்பையும் அனுசரித்து வேட்பாளர்களை அறிவிக்க காங்கிரஸ் முயன்று வருகிறது.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், கௌரவ் கோகோய், முதல்வர் அசோக் கெலாட், சுக்ஜிந்தர் ரந்தாவா, ஜிஎஸ் தோதாஸ்ரா ஆகியோர் இதில் பங்கேற்றிருந்தனர். அப்போது, வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து, ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டிருந்தது. அதில் 33 வேட்பாளர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த பட்டியலில் முதல்வர் அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதியில் போட்டியிடுகிறார். சச்சின் பைலட் டோங் தொகுதியில் போட்டியிடுகிறார். சச்சின் பைலட்டுடன் இணைந்து கடந்த 2020ஆம் ஆண்டு அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 3 தலைவர்களுக்கும் சீட் கிடைத்துள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் தேர்தலில் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது. இண்டாம் கட்ட பட்டியலில் 43 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். அசோக் கெலாட்டின் விசுவாசியான பாபு லால் நகர் டுடு தொகுதியில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளார். அவர் முந்தைய தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, அசோக் கெலாட்டின் தலைமையில் ராஜஸ்தான் அரசு அமைப்பதற்கு உதவினார்.

இரண்டாவது வேட்பாளர் பட்டியலில் ராஜஸ்தான் அமைச்சர்கள் பலருக்கும் டிக்கெட் கிடைத்துள்ளது. கஜுவாலாவில் கோவிந்த் ராம் மேக்வால், சிவில் லைன்ஸில் பிரதாப் சிங் கச்சாரியாவாஸ், விஸ்வேந்திர சிங் டீக், பர்சாதி லால் மீனா, உதய் லால் அஞ்சனா, சகுந்தலா ராவத். சசுக்ராம் விஷ்னோய், ராம்லால் ஜாத் மற்றும் பிரமோத் ஜெயின் பாயா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மேலும், சோஜாத் தொகுதியில் ராஜஸ்தானின் முன்னாள் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் ஆர்யாவை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இவர் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் நெருங்கிய கூட்டாளியாக கருதப்படுகிறார். காங்கிரஸின் அனில் ஷர்மா சதர்ஷாஹர் தொகுதியிலும், ஜுபர் கான் ராம்கர் தொகுதியிலும், முராரி லால் மீனா தௌசா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்

ராஜஸ்தான் தேர்தலில் இதுவரை காங்கிரஸ் 76 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+