ஆம் ஆத்மி கோரிக்கையை பரிசீலனை செய்து ஆதரவு குறித்து முடிவு - காங்கிரஸ்

டெல்லியில் ஆட்சி அமைக்க விருப்பம் இல்லை என்று பா.ஜனதா அறிவித்ததை அடுத்து ‘ஆம் ஆத்மி' கட்சியின் சட்டசபை கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரசு அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதற்கிடையே நேற்று ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி ஆளுநருக்கு கடிதம் அனுப்பியது.
இந்நிலையில் ஆளுநரின் அழைப்பை ஏற்று கெஜ்ரிவால் இன்று அவரை சந்தித்து பேசினார். அப்போது ஆட்சி அமைப்பது தொடர்பாக முடிவெடுக்க கூடுதலாக 10 நாட்கள் அவகாசம் அளிக்க ஆளுநரிடம் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், எங்களது 18 கோரிக்கைகளுடன் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கும் கடிதம் அனுப்பினோம்.
மேலும், காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க முன்வந்திருப்பது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும், ஆதரவு அளிப்பதற்கான காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கடிதத்தை படித்த பின்னர் ஆதரவு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
அக்கட்சியின் மூத்த தலைவர் அகமது இது பற்றி கூறுகையில், கெஜ்ரிவால் கடிதம் தொடர்பாக 2 நாட்களில் முடிவெடுக்கப்படும் என்றார்.


Click it and Unblock the Notifications
