மது பார், ஸ்பா.. ரூ.1.20 லட்சம் கட்டண வில்லா.. மகாராஷ்டிரா காங். எம்எல்ஏக்கள் வாழ்றாங்கப்பா
ஜெய்ப்பூர்: மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 44 தொகுதிகளை வென்றது. பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரசுக்கு அடுத்து 4வது பெரிய கட்சியாகத்தான் வர முடிந்தது என்றாலும், இப்போது அந்த கட்சி எம்எல்ஏக்களுக்கு ராஜ வாழ்க்கை கிடைத்து வருகிறது.
ஏனெனில் தங்கள் எம்.எல்.ஏ.க்களை மற்ற கட்சிகள் குதிரை பேரத்தில் இழுத்துவிடும் என்ற அச்சத்தால், ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள, ஜெய்ப்பூர்-டெல்லி நெடுஞ்சாலையிலிருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவில் அமைதியான சூழலில் உள்ள ஐந்து நட்சத்திர ரிசார்ட்டான பியூனா விஸ்டா ரிசார்டில் 44 பேருக்கும் அறை எடுத்து கொடுத்து உபச்சாரம் செய்து வருகிறது காங்கிரஸ்.

ஜெய்ப்பூரில் உள்ள இந்த ஐந்து நட்சத்திர ரிசார்ட்டில் பல ஆடம்பரமான வசதிகள் உள்ளன. இங்கு மொத்தம், 50 தனியார் வில்லாக்கள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும், சொந்தமாக ஒரு நீச்சல் குளம் உள்ளது.

வில்லாக்களுடன் இணைக்கப்பட்ட நீச்சல் குளங்களுடன், இரண்டு உணவகங்கள், இரண்டு பார்கள் மற்றும் ஒரு ஸ்பா ஆகியவை உள்ளன, அங்கு விருந்தினர்கள் ஓய்வெடுக்கலாம், சொகுசு வாழ்க்கையை அனுபவிக்கலாம். இந்த ரிசார்ட் ஒரு பிரெஞ்சு அரசியல்வாதிக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. எனவே, பிரெஞ்சு மற்றும் ராஜஸ்தானி பாணியில் கலக்கலாக வில்லா கட்டப்பட்டுள்ளது.
பியூனா விஸ்டா ரிசார்ட்ஸின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில், தனியார் பூல் கொண்ட கார்டன் வில்லாவிற்கு, ஒரு நாளைக்கு சுமார் 24,000 ரூபாய் கட்டணமாக வசூலிப்பதாக கூறியுள்ளது. இதுதான் இருப்பதிலே குறைந்த விலை வில்லா என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். டாப்-எண்ட் வகை, தனியார் நீச்சல் குளம் கொண்ட ராயல் பிரத்தியேக வில்லாவிற்கு, ஒரு நாளைக்கு சுமார் 1,20,000 ரூபாய் கட்டணம். இங்கு, விருந்தினர்களுக்கு பல ஆடம்பரமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

எம்.எல்.ஏ.க்களும் வி.ஐ.பி சுற்றுலாப் பயணிகளைப் போலவே நடத்தப்படுகிறார்கள். ஜோத்பூர், புஷ்கர் மற்றும் அஜ்மீர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு அழகிய இடங்களுக்கு எம்எல்ஏக்கள், அழைத்துச் செல்லப்பட்டு குஷிப்படுத்தப்படுகிறார்கள்.
-
புழுதி புயலில் சிக்கிய ராஜஸ்தான்.. வீடுகளை மூடியதால் மூச்சுவிட முடியாமல் மக்கள் தவிப்பு.. வீடியோ பாருங்க -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications