Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முஸ்லீம்களை சுட குறிவைக்கும் சிஎம்! "கருணையே காட்டக்கூடாது!" என பாஜக பதிவிட்ட சர்ச்சை வீடியோ நீக்கம்

Subscribe to Oneindia Tamil

திஸ்பூர்: அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, இஸ்லாமியர்களின் போட்டோக்களை துப்பாக்கியால் சுடுவது போன்ற ஒரு வீடியோவை அம்மாநில பாஜக அதிகாரப்பூர்வமாகச் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது பெரும் சர்ச்சையானது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் மிகக் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்த நிலையில், அந்த வீடியோ இப்போது நீக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடக்கும் நிலையில், அங்கும் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே அசாம் மாநில பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ மிகப் பெரியளவில் சர்ச்சையானது. அதில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, இஸ்லாமியர்களின் புகைப்படங்களை நோக்கி துப்பாக்கியால் சுடுவது போன்ற ஒரு காட்சிகள் இடம்பெற்று இருந்தது.

Congress Slams Himanta Biswa Sarma Over Call to Genocide for the controversial Point blank video

பாஜக பகிர்ந்த வீடியோ

இந்த வீடியோ எதிர்க்கட்சிகளிடமிருந்து கடும் கண்டனத்தைப் பெற்றுள்ளது. இந்த வீடியோ இனப்படுகொலைக்கான அழைப்பு போலவே இருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடியுள்ளன. அசாம் மாநில பாஜக இந்த வீடியோவை தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தது. இதற்குப் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் மிக கடுமையான எதிர்ப்புகள் வந்ததால் இந்த வீடியோ நீக்கப்பட்டது.

அதில் தொப்பி அணிந்துள்ள அசாம் காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோய் மற்றும் மற்றொரு முஸ்லிம் நபரின் போட்டோவை பிஸ்வ சர்மா துப்பாக்கியால் சுடுவது போன்ற வீடியோ இருந்தது. மேலும், அந்த போட்டோ ஒரு சுவரில் தொங்கவிடப்பட்டு இருந்த நிலையில், அதில் "கருணையே காட்டக்கூடாது" என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. மேலும், "பாயிண்ட் பிளாங்க் ஷாட்" என்ற தலைப்பில் அது பதிவிடப்பட்டு இருந்தது.

காங்கிரஸ் தாக்கு

இந்த வீடியோ பதிவான உடனேயே காங்கிரஸ் தரப்பில் இருந்து இதற்கு மிகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. காங்கிரஸ் கட்சியின் கே.சி. வேணுகோபால், இந்த வீடியோவை விமர்சித்து, "இது இனப்படுகொலைக்கான அழைப்பே தவிர வேறு எதுவும் இல்லை. இந்தப் பாசிச ஆட்சி பல ஆண்டுகளாக வளர்த்து வரும் ஒரு கனவு தான் இது! வெறுமன சாதாரண ட்ரோல் என்று கடந்து செல்லக்கூடியோ வீடியோ இல்லை. இது பாஜக உயர் மட்டத்திலிருந்து பரப்பப்படும் விஷம். இதற்குக் கடுமையான விளைவுகள் இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நீதித்துறை தலையிட்டு, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.

அதேபோல காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வப் பக்கத்திலும் இதற்குக் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதில் அவர்கள், "பாஜகவின் அசாம் பிரதேசத்தின் அதிகாரப்பூர்வக் கணக்கு, சிறுபான்மையினரைக் குறிவைத்து கொலை செய்வதைக் கொண்டாடும் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளது. இது மிகவும் அருவருக்கத்தக்கது மற்றும் அச்சமூட்டுகிறது. இதைச் சாதாரண ட்ரோல் வீடியோ என்று நிராகரிக்க முடியாது..

இனப்படுகொலை

இது பெரும் வன்முறை மற்றும் இனப்படுகொலைக்கு அழைப்பு விடுப்பதாகும். பல ஆண்டுகளாக இந்த வெறுப்பை வளர்த்து, கடந்த 11 ஆண்டுகளாக அதை சாதாரணமாக மாற்றிய இந்த பாசிச ஆட்சியின் உண்மையான முகத்தை இது எதிரொலிக்கிறது. இந்த நல்லிணக்கமற்ற மற்றும் விஷத்தைப் பரப்பும் செயலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியது.

திரிணாமுல் காங்கிரஸ்

திரிணாமுல் காங்கிரஸும் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளது. அக்கட்சி இது தொடர்பாக, "இந்த பதிவு இந்திய அரசியலைச் செயல்திறன் மிக்க ரத்த வெறி கொண்ட ஒன்றாகக் காட்டுகிறது. நார்மலாக்கப்பட்ட வெறுப்பு மற்றும் இஸ்லாமியர்களை மனிதத்தன்மையற்றவர்களாக சித்தரித்து இந்த வீடியோ காட்டுகிறது. ரிக்‌ஷா கட்டணத்தைக் குறைவாகக் கொடுத்து சிறுபான்மையினரைத் துன்புறுத்தும்படி சொன்ன அதே நபர் தான் இதைச் செய்துள்ளார்.

பாஜக இப்போது குறிப்புகள் மூலம் விஷத்தையும் வெறிப்பையும் பரப்புவதில்லை.. அவர்கள் ரத்த வெறியுடன் செயல்பட்டு, தங்களைத் தடுக்க முடியாது என சவால் விடுகின்றனர்" என்று காட்டமாக விமர்சித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+