மோசடி மோடிக்கு ஆதரவதாக மற்றொரு மோடியா? சுஷ்மாவை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல் !!
ராய்ப்பூர் : லலித் மோடிக்கு உதவிய குற்றச்சாட்டில் சிக்கியுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை நீக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
தேடப்படும் குற்றவாளியான ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவிய குற்றச்சாட்டில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சிக்கியுள்ளார்.
இந்நிலையில், சுஷ்மா சுவராஜை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
சத்தீஷ்கார் மாநிலம் கோர்பாவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது...
லலித் மோடிக்கு உதவிய சுஷ்மா ஸ்வராஜை நீக்க வேண்டும். அவர் வெறும் அமைச்சர் தான். ஒரு மோடிக்கு ஆதரவாக மற்றொரு மோடி இருப்பதையே இச்சம்பவம் காட்டுகிறது.
பிரதமர் மோடி, கருப்பு பணத்தை மீட்டு வருவதாக உறுதி அளித்தார். ஆனால், கருப்பு பணத்தின் அடையாள சின்னமாக விளங்கும் லலித் மோடிக்கு அவர்கள் மனிதாபிமான அடிப்படையில் உதவிக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications