கோவா, பீகாரைத் தொடர்ந்து மணிப்பூர், மேகாலயாவிலும் காங். போர்க்கொடி- ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது
மணிப்பூர், மேகாலயாவிலும் காங். ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது.
Subscribe to Oneindia Tamil
ஷில்லாங்/இம்பால்: கோவா, பீகாரைத் தொடர்ந்து மணிப்பூர் மற்றும் மேகாலயாவில் தனிப்பெரும் கட்சியான காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளது.
கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அமைத்தது பெரும் அரசியல் குழப்பத்துக்கு வழிவகுத்துள்ளது. தற்போது மாநிலங்களில் தனிப்பெரும் கட்சிகளாக இருப்பவையும் ஆட்சி அமைக்க் உரிமை கோரி ஆளுநர்களை சந்திக்க உள்ளன.

பீகாரில் ஆர்ஜேடி, கோவாவில் காங்கிரஸ் கட்சி நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகின்றன. இதேபோல் மணிப்பூர் மற்றும் மேகாலயாவிலும் காங்கிரஸ்தான் தனிப்பெரும் கட்சி.
ஆகையால் இம்மாநிலங்களிலும் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரை நாளை அம்மாநில எம்.எல்.ஏக்கள் சந்திக்க உள்ளனர். இம்பாலில் மணிப்பூர் முன்னாள் முதல்வர் இபோபி சிங், ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications