10% இடங்களை வெல்லாத காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது!
டெல்லி: பிரதான எதிர்க்கட்சியாக கூட காங்கிரசால் வரமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளபோதிலும், இந்திய அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சி தலைவர் இல்லாத நிலை முன்பும் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் 1952ம் ஆண்டு முதன் முதலாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது முதல் 1977ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அமைந்த ஐந்து நாடாளுமன்றங்களிலும் எதிர்க்கட்சி அந்தஸ்துடன் எந்த கட்சியும் இல்லை. அந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்றது. முதல் நாடாளுமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 16 உறுப்பினர்கள் இருந்தனர். அப்போது நாடாளுமன்ற மொத்த சீட்டுகள் 489தான். இந்திய அரசியல் சாசனப்படி மொத்த சீட்டில் 10ல் ஒருபங்கு தொகுதிகளை வென்றால்தான், அந்த கட்சியை எதிர்க்கட்சியாக அங்கீகரிக்க முடியும்.எனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியவில்லை.
நாடு முதன் முதலாக காங்கிரசில் இருந்துதான் எதிர்க்கட்சி தலைவரை பார்த்தது. 1975ம் ஆண்டு இந்திராகாந்தி கொண்டுவந்த எமர்ஜென்சியால் 1977ல் அக்கட்சி தோற்றது. அப்போது காங்கிரசின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஒய்.பி.சவான் எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றினார். இப்போது மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் இல்லாத நாடாளுமன்றத்தை இந்தியா பார்க்க உள்ளது. ஏனெனில் மொத்தமுள்ள 543 சீட்டுகளில் 10ல் ஒரு பங்கான 54 சீட்டுகளைக் கூட காங்கிரஸ் பெறப் போவது இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications