மேகாலயாவில் ஸ்கோர் செய்யும் காங்கிரஸ்.. ரேசில் பின் தங்கும் பாஜக.. ஜான் கி பாத் எக்ஸிட் போல்!
மேகாலயாவில் பாஜகவைவிட காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று Jan Ki Baat எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.
ஷில்லாங்: மேகாலயாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று Jan Ki Baat எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. இதேபோல் பாஜகவை விட காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும் Jan Ki Baat தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகியவற்றுக்கு கடந்த மாதம் சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. இதில் திரிபுராவில் பிப்ரவரி 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
நாகலாந்து, மேகாலயாவில் இன்று சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. மேகாலயாவில் பாஜக அங்கம் வகிக்கும் மேகாலயா ஜனநாயக கட்சிகள் எனும் கூட்டணி ஆட்சி நடக்கிறது.

மேகாலயாவில் வாக்குப்பதிவு
மேகாலயாவில் வாக்குப்பதிவு தொடங்கியது முதலே வாக்காளர்கள் விறுவிறுப்பாக தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.நீண்ட வரிசையில் இன்று வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றியதை காண முடிந்தது. மேகாலயாவை பொறுத்தவரை மொத்தம் 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஆனால், இன்று 59 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. ஏனெனில், சோகியாங் தொகுதி ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான லிங்டோவின் திடீர் மரணத்தால் அந்த தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

மம்தா பானர்ஜியின் வியூகம்
இதனால் 59 தொகுதிகளுக்கு நடந்த இந்த தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணியை வீழ்த்தி வெற்றி பெறும் முனைப்பில் மம்தா பானர்ஜியின் வியூகம் வகுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வராக இருந்த முகுல் சங்மா சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது அவருக்கு பலமாக பார்க்கப்படுகிறது. இங்கு தற்போது அனைத்து கட்சிகளும் தனித்தனியே களம் காண்கின்றன. இங்கு ஆட்சியை பிடிக்க 31 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

அனல் பறந்த பிரசாரம்
மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதல்வராக கன்ராட் சங்மா பதவி வகித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக இவரது கூட்டணி அரசில் இடம்பிடித்திருந்த பாரதிய ஜனதா இந்த தேர்தலில் தனித்து களம் இறங்கியுள்ளது. பாஜகவிற்கு ஆதரவாக பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். அதேபோல காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும், மாநிலத்தை சேர்ந்த சிறிய கட்சிகளும் கடந்த சில வாரங்களாக மாநிலம் முழுவதும் அனல் பறக்கும் பிரசாரத்தை மேற்கொண்டன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது.

ஜான் கி பாத் கருத்துக்கணிப்பு
இந்த நிலையில், வாக்குப்பதிவு முடிந்த நிலையில் இன்று இரவு 7 மணியளவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. இதில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்று ஜான் கி பாத் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. தேசிய மக்கள் கட்சி 11-16, காங்கிரஸ் கட்சி 6-11, பாஜக 3-7 வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக ஜான் கி பாத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

பாஜகவை முந்திய காங்கிரஸ்
60 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட மேகாலாயாவில் தனிப்பெரும்பான்மைக்கு 31 இடங்கள் தேவை என்ற நிலையில், அங்கு மீண்டும் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்பு உள்ளது. மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக கன்ராட் சங்மா பதவி வகித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக இவரது கூட்டணி அரசில் இடம்பிடித்திருந்த பாரதிய ஜனதா இந்த தேர்தலில் தனித்து களம் இறங்கியுள்ளது. இந்த முறை எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்று Jan Ki Baat கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இதனால், தொங்கு சட்ட சபை அமைந்து மீண்டும் கூட்டணி ஆட்சியே அங்கு அமையும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் பாஜகவை விட அதிக தொகுதியில் வெற்றி பெறும் என்றும் ஜான்கி பாத் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. .
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications