பாஜக அரசு மாணவர்களின் குரல் வளையை நெறிக்கிறது: சோனியா குற்றச்சாட்டு
டெல்லி: எதிர்க்கட்சிகள், மாணவர்கள், பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் குரல் வளையை மத்தியில் ஆளும் பாஜக அரசு நெறிக்கிறது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்கட்சி தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்தும் அவையில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கூட்டத்தில் சோனியா காந்தி கூறுகையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், மக்களின் வளர்ச்சியை நிலைநாட்டவும் தவறிவிட்டது. எதிர்க்கட்சிகள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரின் குரல் வளையை மத்தியில் ஆளும் பாஜக அரசு நெறிக்கிறது. மேலும், கேள்வி கேட்கும் உரிமை, மாற்றுக் கருத்துக்கள், விவாதங்கள் உள்ளிட்டவையும் அழிக்கப்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டினார்.
டெல்லியில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துவிட்டது. நாடாளுமன்றம் சுமூகமாக செயல்படவே விரும்புகிறோம். நாடாளுமன்றத்தை அமைதியாக நடத்துவது அரசின் கடமை என்று சோனியா கூறினார். இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், திக் விஜய் சிங், ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications