காங்கிரஸ் தலைவராக ராகுலை தேர்ந்தெடுக்க... நாளை கூடுகிறது செயற்குழு கூட்டம்
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த நாளை டெல்லியில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக நாளை டெல்லியில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் கூடுகிறது.
காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக உள்ள ராகுல் காந்தி பதவி உயர்த்தப்பட்டு கட்சியின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்பதே கட்சியின் மூத்த தலைவர்களின் விருப்பமாகும். கடந்த தீபாவளி பண்டிகைக்கு பிறகு அவர் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒரு விழாவில் பேசிய சோனியா காந்தியும் விரைவில் நீங்கள் விரும்பியது நடக்கும் என்று ராகுல் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதை சூசகமாக தெரிவித்தார். இந்நிலையில் டெல்லியில் நாளை காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடுகிறது.
சோனியா இல்லத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.
அதைத்தொடர்ந்து, ராகுல் காந்தி தலைவர் பதவிக்காக வேட்புமனு தாக்கல் செய்வார். அவரை எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யாவிட்டால், ராகுல் ஒருமனதாக புதிய தலைவராக அறிவிக்கப்படுவார். இதனால் நாளை நடைபெறும் இந்த கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications